*விழுப்புரத்தில் குறைந்த செலவில் அரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
*விழுப்புரம் மாவட்டம், சேரானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 114 மாணவர்கள் படிக்கின்றனர். அதில் பெரும்பாலானோர் ஏழை, விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தான்.
*இந்தப் பள்ளியில் உள்ள கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருந்துவந்தது. இதனால், மாணவர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழித்தனர்.
*மாணவர்களுக்கு சுகாதார சூழலை உருவாக்குவதற்காக பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும் இணைந்து ஆலோசித்தனர்.
*இதற்காக, 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேன்களை வாங்கி அவற்றை நவீன கழிவறைகளைப்போன்று வடிவமைத்து மாணவர்களுக்கான நவீன கழிவறையை ஆசிரியர்களே உருவாக்கினர்.
*இயற்கை உபாதையை கழித்தபின்னர், கைகால்களை கழுவதற்கு தனியாக தண்ணீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே கழிவறை சுகாதாரப் பழக்கத்தை ஆசிரியர்கள் பழக்கியுள்ளனர்.
*இதற்கான செலவை தலைமையாசிரியரும், பிற ஆசிரியர்களும் இணைந்து பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நவீன கழிவறையை பள்ளி மேலாண்மைக் குழுவைச் சேர்ந்த கிராம மக்களே திறந்து வைத்தனர்.
*பள்ளி ஆசிரியர்களின் இந்த அர்ப்பணிப்பும், அக்கறையும் மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.