இரட்டை இருப்பிடச் சான்று பிரச்னையை தவிர்க்க, மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங்கில் ஆதார் அட்டை கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி விஞ்னயா உள்ளிட்ட ஏழு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறுவதற்காக பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக இவர்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருப்பிடச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்களின் சொந்த மாநிலத்திலும், தமிழகத்திலும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளனர்.இதனால், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சேர்க்கை பெறுவதில் வாய்ப்பு குறைந்துள்ளது. எனவே, மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியலை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆய்வு செய்து இரட்டை இருப்பிடச் சான்றிதழ் கொடுத்தவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, மருத்துவ சேர்க்கைக்கு வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் பல இரட்டை இருப்பிடச் சான்றிதழ் உள்ள விண்ணப்பங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் வேறு மாநிலங்களிலும் விண்ணப்பித்துள்ளனரா என்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் ஆய்வு செய்வது கடினம் என்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சக்திவேல் ஆஜராகி, இரட்டை இருப்பிடச் சான்று பிரச்னை ஏற்படாமலிருக்க ஆதார் எண்ணை விண்ணப்பத்தில் சேர்க்குமாறு உத்தரவிட வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்த நீதிபதி, இரட்டை இருப்பிடச் சான்றிதழ் பிரச்னையை தீர்க்க வேண்டுமானால் இந்த ஆண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் ஆதார் அட்டை காண்பிக்கப்பட வேண்டும். இது குறித்து இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.