தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரசு வேலையில் நேரடியாக சேர புதிய வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 11, 2018

Comments:0

தனியார் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அரசு வேலையில் நேரடியாக சேர புதிய வாய்ப்பு!



தனியார் துறையில் நீங்கள் பணிபுரிந்து வருகிறீர்கள், உங்கள் வயது 40 மற்றும் 15 வருடம் பொருளாதார விவகாரங்கள், விமானப் போக்குவரத்து அல்லது பொருளாதாரத் துறையில் உங்களுக்கு முன் அனுபவம் உள்ளது என்றால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயலாளர் பணிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் புதிய லேட்டரல் எண்ட்ரி முறையானது அரசு துறைகளில் புதிய எண்ணங்களுடன் அணுக வேண்டும் எப்பத்தர்க்காக என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிலும் இந்த லேட்டரல் எண்ட்ரி முறை மூலமாக அதிகாரிகளைப் பணிக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Kaninikkalvi.blogspot.com 

லேட்டரல் எண்ட்ரி
லேட்டரல் எண்ட்ரி மூலம் செயலாளர் பணிக்கு மூன்று வருட ஒப்பந்தத்தில் சேர முடியும். தேவைப்பட்டால் திறனைப் பொருத்து 5 வருடம் வரை நீட்டிப்பும் கிடைக்கும். துணை செயலாளராகப் பணியில் சேருபவர்களுக்கு மாதம் 1.44 லட்சம் முதல் 2.18 லட்சம் ரூபாய் வரை சம்பள உயர்வு கிடைக்கும்.
Kaninikkalvi.blogspot.com 

யாருக்கெல்லாம் வேலை வாய்ப்பு கிடைக்கும்?
தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வருபவர்கள், ஆலோசனை நிறுவனங்கள், வெளிநாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் பணிபுரிபவர்கள் எல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏன் லேட்டரல் எண்ட்ரி முறை?
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள துணை செயலாளர் பதவிகளுக்குத் தேவையான துணை செயலாளரின் எண்ணிக்கையில் தட்டுப்பாடு உள்ளதால் நிதி ஆயோக் நிறுவனம் லேட்டரல் எண்ட்ரி முறைக்குப் பரிந்துரை செய்துள்ளது.
Kaninikkalvi.blogspot.com 

யாருக்கு இணையான பதவி?
செயலாளர் மற்றும் துணை செயலாளர் பதவிகளில் ஐஏஎஸ், ஐஆர்எஸ், ஐபிஎஸ் மற்றும் வருமான வரி சேவைகளிலிருந்து அனைத்து இந்திய சேவை அலுவலர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தத் துறைகளில் அனுபவம் தேவை
மத்திய அரசு விவசாயம், ஒத்துழைப்பு மற்றும் விவசாயிகளின் நலன்புரி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் அனுபவம் உள்ள 10 நபர்களைத் தற்போது முதற்கட்டமாக லேட்டர்ல் எண்ட்ரி மூலம் செயலாளர் பணிக்கு எடுக்க உள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி என்ன?
துணை செயலாளர் பதவிக்கு லேண்டரல் எண்ட்ரி முறை கீழ் விண்ணப்பிக்க 2018 ஜூலை 30-ம் தேதி தான் கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளனர்.
Kaninikkalvi.blogspot.com 

யாருக்குக் கீழ் பணியைச் செய்ய வேண்டும்?
துணை செயலாளர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் செயலாளர்கள். கூடுதல் செயலாளர்கள் அல்லது அவர்கள் தேர்வு செய்யப்படும் துறையின் மூத்த நிர்வாகி உள்ளிட்டவர்களுக்குக் கீழ் பணிபுரிய வேண்டி வரும்.

பணியின் விவரங்கள்
பணிக்குச் சேரும் துணை செயலாளர்கள் அந்தத் துறையில் இருக்கும் திட்டங்களுக்கான பாலிசியை வகுத்தல், திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டி இருக்கும்.

அரசு ஊழியர்கள்
ஒரு மாநிலத்தின் அல்லது யூனியன் பிரதேசத்தின் அரசுப் பணிகளில் உள்ளவர்கள் அல்லது பிற அரசு நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் இந்தச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்து டெப்டேஷன் முறையில் பணிகளைத் துவங்களாம்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews