தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நிறைவடைந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலையின், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்புக் கல்லுாரிகள் மூலம், 12 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. 2018 - 19ம் ஆண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு, 48 ஆயிரத்து, 682 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா கூறியதாவது:வேளாண் பல்கலையின், இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப வினியோகம், மே, 18 முதல் ஜூன், 17 வரை நடந்தது. 3,422 இடங்களுக்கு, 48 ஆயிரத்து, 682 பேர் விண்ணப்பித்துள்ளனர். 32 ஆயிரத்து, 561 விண்ணப்பங்கள், உரிய கட்டணம் செலுத்தி, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டவை. இதில், 18 ஆயிரத்து, 695 மாணவியரும், 13 ஆயிரத்து, 866 மாணவர்களும் அடங்குவர்.சிறப்பு பிரிவினருக்கான, மூன்று நாள் சான்றிதழ் சரிபார்ப்பு நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது. ஜூன், 22ல் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை, 7ல், சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடக்கும். ஜூலை, 9 முதல், பொது பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.