கவுன்சிலிங்கில் இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள், மூன்றாண்டுகளுக்கு அதே பள்ளியில் பணிபுரிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கெடுபிடி நடவடிக்கைகள், நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல்வேறு புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில், இடமாறுதல் பெறும் ஆசிரியர்கள், இனி குறைந்தது, மூன்று ஆண்டு அதே பள்ளியில் பணிபுரிய வேண்டும். மாநில சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, வெளிமாவட்ட மாறுதல் கிடையாது, ஈராசிரியர் பள்ளிகளில், புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை, பணிவிடுவிப்பு இல்லை என்பன போன்ற புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன
.kaninikkalvi.blogspot.com.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தற்போது கல்வி மாவட்டங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி மாவட்டத்துக்குள் மாறுதல் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளில் உள்ள ஆசிரியர்கள், நகர்ப்பகுதிக்குள் வர முடியாது. மேலும் மூன்றாண்டுகளுக்கு இடமாறுதல் கோர முடியாது என்பதால், நிர்வாக மாறுதலுக்கு சிபாரிசுகள் அதிகரிக்கும். இதனால், ஆசிரியர் மாறுதலுக்கான லஞ்ச லாவண்யம் பெருகும். எனவே, ஆசிரியர் மாறுதல் தெளிவுரையில் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.