இன்ஜினியரிங் பிரிவில் 160க்கும் மேற்பட்ட பிரிவுகள்: எங்கு படிக்கலாம்? பிளாஸ்டிக் இன்ஜினீயரிங்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 13, 2018

Comments:0

இன்ஜினியரிங் பிரிவில் 160க்கும் மேற்பட்ட பிரிவுகள்: எங்கு படிக்கலாம்? பிளாஸ்டிக் இன்ஜினீயரிங்!




இன்ஜினியரிங் என்றால் மாணவர்களுக்கும் மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் அலாதியான பிரியம்தான்.

ஆனால் இன்ஜினியரிங் பிரிவில் 160க்கும் மேற்பட்ட பிரிவுகளில் படிப்புகள் வழங்கப்படுகிறது என்பது பெரும்பாலான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியுமா? என்றால் கேள்விக்குறிதான் பதிலாக அமைகிறது.

ஊருக்கு ஒரு இன்ஜினியர் என்று இருந்தகாலம் போய் வீட்டுக்கு ஒரு இன்ஜினியர் என்ற காலம் வந்துவிட்டது. இதற்கு கல்லூரிகளின் பெருக்கமும் ஒரு காரணம். பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளிலில் இன்ஜினியர்கள் ஆதிக்கம் செலுத்தக் காரணம், 
Kaninikkalvi.
எடுத்துக்காட்டாக 10 ஆம் வகுப்பை தகுதியாக கொண்ட குரூப் 4 தேர்வுகளில் இருந்து கால் சென்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்ஜினியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கு பாதி காரணம் அரசாக இருந்தாலும், சரியான படிப்புகளை தேர்தேடுத்து படிக்காததே முழுமையான காரணமாக அறியப்படுகிறது.

அந்தவகையில் படித்ததும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலைக்கு உத்தரவாதம் உள்ள படிப்பான பிளாஸ்டிக் இன்ஜினியரிங் படிப்பை பற்றி பார்க்கலாம்...

மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனம். இந்த வகையான படிப்புகளை வழங்கி வருகிறது.

படிப்புகள்: பிளாஸ்டிக் டெக்னாலஜி டிப்ளமோ, சான்றிதழ் படிப்பு எனத் தொடங்கி பிஎச்டி வரை பயிற்றுவிக்கப்படுகிறது.

3 ஆண்டு கால டிப்ளமோ:
டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி
டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி
தகுதி: மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்புகளில் சேர 10 ஆம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம். இப்படிப்பில் சேர அதிகபட்ச வயதுவரம்பு 20.

1 ஆண்டு முதுநிலை டிப்ளமோ:
பிளாஸ்டிக் மோல்ட் டிசைன்
தகுதி: இப்படிப்பில் சேர மெக்கனிக்கல், பிளாஸ்டிக் டெக்னாலஜி, ஆட்டோமொபைல், மெக்கட்ரானிக்ஸ் துறையில் டிப்ளமோ பட்டம் தேவை.

பிளாஸ்டிக் புராசசிங்& டெஸ்டிங்
தகுதி: வேதியியல் துறையில் மூன்று ஆண்டு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதில் சேர அதிக பட்ச வயது வரம்பு 25.

நுழைவுத்தேர்வு: மேற்கண்ட படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வு ஜூன் மாதங்களில் நடத்தப்படுகிறது.

கல்வி கட்டணம்: டிப்ளமோ படிப்புகளில் சேர கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.20-28 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமாக செயல்படும் சிப்பெட் நிறுவனம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.
Kaninikkalvi.blogspot.com 
சிப்பெட் நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பிளாஸ்டிக் தொழிற்நுட்ப பாடங்களை பயிற்றுவிக்கின்றன.
வருடத்திற்கு மற்ற தொழிற்துறை வளர்ச்சி 6 சதவிகிதம் என்றால் பிளாஸ்டிக் தொழிற்துறை வளர்ச்சி 14 சதவிகிதமாக உள்ளது. ஒரு ஆண்டிற்கு பிளாஸ்டிக் தொழிற்துறை மட்டும் ரூ.1 லட்சம் கோடிக்கு டர்ன் ஒவர் செய்து வருகிறது.

ரீசைக்கிள் பிளாஸ்டிக் வகை மட்டும் சுமார் ரூ.32 ஆயிரத்து 520 கோடிக்கு டர்ன் ஓவர் செய்கிறது. பிளாஸ்டிக் தொழில் மூலம் ஆண்டிற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் அரசு வருமானம் ஈட்டி வருகிறது. அதனால் எந்தவித தயக்கமும் இன்றி இந்த வகையான படிப்புகளை தேர்ந்தேடுத்து படிக்கலாம்.

வேலை வாய்ப்பு: தனியார் நிறுவனம் முதல் அரசு நிறுவனம் வரை பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. என்ன வகையான படிப்பை படித்தோமோ அதே துறையில் வேலை பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

சம்பளம்: குறைந்த பட்சமாக ரூ.50 ஆயிரம் முதல் ஆரம்பகட்ட ஊதியமாக பெறலாம். முதுநிலை படிப்புகளை முடிக்கும் பட்சத்தில் ரூ.75 முதல் ஊதியமாக பெறமுடியும்.
kaninikkalvi.blogspot.com 
இங்கு முதுநிலை, இளநிலை, டிப்ளோமா மட்டுமல்லாமல் திறன் சார்ந்த குறுகியகால மேம்பாட்டு வகுப்புகள், தொழிற்பயிற்சி வகுப்புகள் என ஏராளமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு மத்திய அரசுத் துறைகளுடனும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் (சிப்பெட்) நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews