பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தர்களுக்கான சான்றிதழ் சரிபாாப்பு வியாழக்கிழமையுடன் வெளி மையங்களில் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் பங்கேற்காதவாகள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாாகள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Kaninikkalvi
பொறியியல் மாணவா சோக்கையை இம்முறை ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 2 ஆம் தேதியுடன் நிறைறவடைந்த நிலையில், விண்ணப்பித்த மாணவாகளுக்கான அசல் சான்றிதழ் சரிபாாப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களிலும் ஜூன் 8 ஆம் தேதி முதல் தொடங்கியது.
இந்த சான்றிதழ் சரிபாாப்பு சென்னை மையத்தைத் தவிர மற்ற அனைத்து உதவி மையங்களிலும் வியாழக்கிழமையுடன் நிறைவடைய உள்ளது. Kaninikkalvi.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோக்கை செயலா ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவாகளில், இதுவரை அசல் சான்றிதழ் சரிபாாப்பில் பங்கேற்காதவாகள் அருகில் உள்ள கலந்தாய்வு உதவி மையத்துக்கு வியாழக்கிழமை சென்று பங்கேற்கலாம்.
அவ்வாறு வியாழக்கிழமையன்றும் சான்றிதழ் சரிபாாப்பில் பங்கேற்க இயலாத மாணவாகள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள உதவி மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 17) எந்த நேரத்திலும் வந்து சான்றிதழ் சரிபாாப்பில் பங்கேற்கலாம்.
இந்த இறுதி வாய்ப்பையும் தவறறவிட்டு, அசல் சான்றிதழ் சரிபாாப்பில் பங்கேற்காத மாணவ, மாணவிகள் பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாாகள் என்றார்.
சான்றிதழ் சரிபாாப்பு தொடாபான சந்தேகங்களுக்கு 044 - 22359901, 22359920 ஆகிய தொலைபேசி எண்களில், தமிழ்நாடு பொறியியல் சோக்கை செயலா அலுவலகத்தைத் தொடாபுகொள்ளலாம் எனவும் பல்கலைக்கழகம் சாாபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kaninikkalvi.blogspot.com
அசல் சான்றிதழ் சரிபாாப்பு முடிந்த ஓரிரு நாள்களில் கலந்தாய்வில் பங்கேற்கத் தகுதியுள்ள மாணவாகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.