திறன் மேம்பாடே முக்கியம்.... மாறுகிறது கல்வித் திட்டம் தேவை மனநிலையில் மாற்றம்: சொல்கிறார்கள் உளவியல் கல்வியாளர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 20, 2018

Comments:0

திறன் மேம்பாடே முக்கியம்.... மாறுகிறது கல்வித் திட்டம் தேவை மனநிலையில் மாற்றம்: சொல்கிறார்கள் உளவியல் கல்வியாளர்கள்





தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி, செயல் வழிக் கற்றல், சமச்சீர் கல்வி, முப்பருவக் கல்வி முறை என குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கற்றல் கற்பித்தலை எளிதாக்கவும் பல விதமான மாற்றங்கள் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக பள்ளி வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

 அதன்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை மட்டுமே புத்தகத்தில் படிக்க வேண்டும். 

அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறையில் படிப்பது மிகவும் அவசியம் என்று கல்வியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
 
 இன்றைய பெற்றோர் பாடங்களை மதிப்பெண்களாக பார்க்கின்றனர். குறிப்பிட்ட பாடத்தை  தனது, குழந்தைகள் படித்தால் மட்டுமே  அவர்களுக்கு எதிர்காலம் உண்டு என்று நினைப்பவர்களாக உள்ளனர்.

 மதிப்பெண்ணிலிருந்து பெற்றோரை மீட்பது முக்கியமான ஒன்று. அதோடு குழந்தை எதைப் படிக்க வேண்டும் என்பதையும் பெற்றோர் முடிவு செய்யக்கூடாது என்பது உளவியல் சார்ந்த கல்வியாளர்களின் கோரிக்கை. 

இது குறித்து புதிய பாடத்திட்ட தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி, செயல் வழிக் கற்றல், சமச்சீர் கல்வி, முப்பருவக் கல்வி முறை என குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கற்றல் கற்பித்தலை எளிதாக்கவும் பல விதமான மாற்றங்கள் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக பள்ளி வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன.

 அதன்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை மட்டுமே புத்தகத்தில் படிக்க வேண்டும். 

அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை செயல்வழிக் கற்றல் முறையில் படிப்பது மிகவும் அவசியம் என்று கல்வியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
 
 இன்றைய பெற்றோர் பாடங்களை மதிப்பெண்களாக பார்க்கின்றனர். குறிப்பிட்ட பாடத்தை  தனது, குழந்தைகள் படித்தால் மட்டுமே  அவர்களுக்கு எதிர்காலம் உண்டு என்று நினைப்பவர்களாக உள்ளனர்.

 மதிப்பெண்ணிலிருந்து பெற்றோரை மீட்பது முக்கியமான ஒன்று. அதோடு குழந்தை எதைப் படிக்க வேண்டும் என்பதையும் பெற்றோர் முடிவு செய்யக்கூடாது என்பது உளவியல் சார்ந்த கல்வியாளர்களின் கோரிக்கை.

இது குறித்து புதிய பாடத்திட்ட ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள ஹெலிக்ஸ் ஓபன் ஸ்கூல் இணை இயக்குனர் சசிகலா கூறியதாவது:  குழந்தையின் மூளையில் கற்றல் எப்படி நடக்கிறது என்பதை, நாம் புரிந்து கொள்வது முதல்படியாகும்

 குழந்தைகள் தான் பார்க்கும், கேட்கும், உணரும் விஷயங்களை ஐந்து புலன்கள் வழியாக சேகரித்து அதனை மூளையில் பதிவு செய்கின்றனர். குழந்தைகளின் கவனித்தல் திறன் முக்கிய இடம் வகிக்கிறது. 

குழந்தைகள் கவனிக்கும் விஷயங்களைப் புரிதலுக்கு உட்படுத்துகின்றனர்.

 அது அர்த்தமுள்ள புரிதலாக இருக்க வேண்டும். குழந்தைகளின் கவனித்தல் திறன் என்பது சில நிமிடங்களே ஆகும்.

 தொடர்ச்சியாக பல மணி நேரம் பாடம் நடத்துவதால், அவர்களை கவனிக்க வைக்க முடியாது. விருப்பம் இருந்தால் மட்டுமே குழந்தைகள் ஒரு விஷயத்தை கவனிக்கும்.

 அதைப் பாடமாக படிப்பதையும், எழுதுவதையும் விட செய்து கற்பதில் குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்கள். அதில் அவர்களின் புரிதலும் மேம்படும். செயல்வழிக் கற்றல் முறையில் குழந்தைகள் விரும்பிச் செய்கின்றனர்.  

 ஐம்புலன்களால் உணர்ந்து விரும்பிக் கற்கும் விஷயங்களை, குழந்தைகள் ஒரு போதும் மறப்பதில்லை. சமச்சீர் மற்றும் முப்பருவக் கல்வி முறையில் இதுவே பின்பற்றப்படுகிறது.

 விரும்பிக் கற்கும் விஷயங்கள், அவர்கள் நினைவு அடுக்குகளில் பதியப்படுகிறது. பதியப்படும் விஷயங்கள் அனுபவத்தின் வழியாக,  அறிவாக மாறுகிறது. 

இந்த அறிவை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு தேர்வில் அளிக்கப்பட வேண்டும். தேர்வு என்பது மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பதாக இருக்க கூடாது.  

ஒரு காலத்தில் மாணவர்கள்  எல்லா விஷயத்தையும் மனப்பாடம் செய்து வைத்திருக்க வேண்டிய தேவை இருந்தது. இன்று தகவல்களைத் தர பலவிதமான சாதனங்கள் நம்மோடு உள்ளது. 

அவற்றை பயன்படுத்துவதற்கான திறமை மட்டுமே தேவைப்படுகிறது. எந்த துறையானாலும் ‘நான்  ஸ்பெஷல்’ என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது.  

இனி வரும் காலங்களில் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்பிருக்கும் கற்றல் முறையே குழந்தைகளுக்கு உதவும். கதைகளாக, படங்களாக, இசையாக, வீடியோவாக, விளையாட்டாக, அனிமேஷன் படக்கதைகளாக, செயல்முறையாகப் பாடம் படிப்பதும், தேர்வு எழுதுவதும் நடைமுறைக்கு வரும். அறிவைத் தீர்மானிக்கும் அளவுகோல்கள் மாறும். அதற்கு ஏற்ற மனமாற்றம் பெற்றோருக்குத் தேவை. இவ்வாறு சசிகலா கூறினார்.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews