பல்வேறு பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் தேவை தற்போது அதிகரித்துள்ளது என்று நீதிபதி கூறியுள்ளார். கூடுதல் மருத்துவ கல்லூரிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் தேவை அதிகமாக உள்ளது என்று நீதிபதி கூறியுள்ளார்.
மருத்துவ மாணவர்கள் விரும்பிய பாடத்தை படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
வாய்ப்பு அளிக்காவிட்டால் தேசத்திற்கு சிறந்த சேவை வழங்க முடியாது. மாநில ஒதுக்கீட்டு கலந்தாய்வு தரவரிசைப்பட்டியலில் சேர்க்க கோரி மனு அளிக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை பெற்ற யோகேஷ் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.
தகுதி இருந்தாலும், உரிமைகோர முடியாது என நீதிபதி தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.