1. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யப்படும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து, அவற்றில் தலைப்பெழுத்து, பிறந்த தேதி, பெயர் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு சான்றொப்பம் இட்டு அளித்திட வேண்டும்
2. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்த பின் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் திருத்தங்கள் குறித்த பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பினால், மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிடும் முன்னர் அத்திருத்தங்கள் கணினியில் ஏற்றப்பட்டு, பிழைகள் அற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து வழங்கப்படும்
3. தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கும் போது மாற்றுச் சான்றிதழில் மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண்ணை எழுதும் கலத்தில் "Refer Original Certificate" என்று குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
4. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சழுத்தம் செய்து பெறப்பட்டப் பின்னர், சம்பந்தப்பட்ட தேர்வருக்கான பள்ளியின் வசமுள்ள மாற்றுச் சான்றிதழ் பதிவேட்டின் Counter Foil -ல் சம்பந்தப்பட்ட தேர்வரது மேல்நிலை மதிப்பெண் சான்றிதழின் வரிசை எண்ணை, பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்படி Counter Foil -ல் மேற்கொள்ளப்படும் பதிவுகள் நிரந்தரமாக பின்வரும் காலத்தில் சரிபார்த்தலுக்காகப் பயன்படுத்தக்கூடிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.