தேர்ந்தெடுங்கள்... நல்ல பொறியியல் கல்லூரியை!: தரமான பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் கடந்த ஆண்டில் எந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த பாடப் பிரிவு கிடைத்தது என்பதை அறியுங்கள். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 29, 2018

Comments:0

தேர்ந்தெடுங்கள்... நல்ல பொறியியல் கல்லூரியை!: தரமான பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் கடந்த ஆண்டில் எந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த பாடப் பிரிவு கிடைத்தது என்பதை அறியுங்கள்.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. மருத்துவ தேர்வு தவிர்த்து மற்ற படிப்புகளை கற்க ஒவ்வொருவரும் கல்லூரிகளை நோக்கி ஓடும் தருணம் இது.
குறிப்பாக பிள்ளைகளின் கட்-ஆஃப் மதிப்பெண் களுடன் பொறியியல் கல்லூரிகளின் கதவுகளின் அருகே கூட்டமாக பெற்றோர்கள் நின்று கல்லூரி குறித்தும், தேர்வு செய்ய வேண்டிய பிரிவுகள் குறித்தும் அலசி ஆராய்ந்து வரும் நிலையில், பல பெற்றோர்களும், பிள்ளைகளும் பதட்டத்துடனே பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வு செய்யும் நிலைதான் உள்ளது.kaninikkalvi.blogspot.in ஆனால் பதட்டத்தால் பல வாய்ப்புகள் பறி போய் விடும் என்பதை அவர்கள் உணருவதில்லை.
சென்ற ஆண்டு பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறரின் மகனையோ, மகளையோ சுட்டிக் காட்டி, அவர்கள் போல் படிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று அடிக்கடி கூறுவது வழக்கமாக பெரும்பாலான குடும்பங்களில் இருக்கிறது. அத்துடன் பெற்றோர் விடுவதில்லை. பொறியியல் படித்த யாரோ ஒருவரின் பிள்ளை கைநிறையச் சம்பளம் வாங்குகிறார் என்பதை அடிக்கடி பிள்ளைகளிடம் கூறுவதால் பொறியியல்தான் சிறந்த படிப்பு மற்றவை தேவையற்ற படிப்புகள் என்ற எண்ணம் பிள்ளைகள் மனதில் ஏற்பட்டு விடுகிறது.
நல்ல கட்-ஆஃப் மதிப்பெண்கள் வைத்திருக்கும் சிலரோ கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்வது குறித்த விழிப்புணர்வு இல்லாமலேயே இன்னும் உள்ளனர்.
எண்ணற்ற இணைய தளங்கள் தரமான பொறியியல் கல்லூரிகளின் கடந்த ஆண்டில் எந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்த பாடப் பிரிவு கிடைத்தது என்பதையும் தெளிவாக பதிவிட்டு வருகின்றன அதை இங்கே அறியவும் - Clilck Here இதில் தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் வாரியாக கல்லூரிகளையும், பாடங்களையும் தேர்வு செய்து கட்-ஆஃப் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
Kaninikkalvi.blogspot.in
இவற்றை எல்லாம் சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர் உதவியுடன் சேகரித்து வைத்துக் கொண்டு அதில் நமக்கு சரியான பாடப்பிரிவு உள்ள கல்லூரிகளின் விவரங்களைத் தொகுத்தெடுத்து வைத்துக் கொண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்றால் நிம்மதியாக நாம் விரும்பிய கல்லூரியை தேர்வு செய்யலாம்.
மேலும் கவுன்சிலிங் நடைமுறைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டால் அவையும் கவுன்சிலிங் நேரத்தில் கைகொடுக்கும்.
பொதுவாக கட்-ஆஃப் மதிப்பெண் என்பது கணிதத்துக்கு 100 மதிப்பெண்களும்(பெற்ற மதிப்பெண்/2),
இயற்பியலுக்கு (பெற்ற மதிப்பெண்/4), வேதியியலுக்கு (பெற்ற மதிப்பெண்/4), மதிப்பெண்களுமாக கணக்கிடப்படும்(மொத்தம் 200க்கு).
.Kaninikkalvi.blogspot. in
ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்களை பலரும் எடுத்திருந்தால், கணித மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை ஒதுக்கப்படும். கணித மதிப்பெண்களும் ஒன்று போல் இருந்தால் இயற்பியல் பின்பு வேதியியல் என மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை ஒதுக்கப்படும். அவை அனைத்தும் ஒன்றாகவே இருந்தால் 4 ஆவது பாடப்பிரிவின் மதிப்பெண் அடிப்படையில் அதாவது உயிரியல், கணினி அறிவியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை ஒதுக்கப்படும். அதுவும் ஒன்று போல் இருப்பின் பிறந்த தேதியின் அடிப்படையில் யார் முன்னதாக பிறந்தாரோ அவருக்கு தரவரிசையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
இது போன்ற தகவல்களை Click Here  
இப்படி, எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் கவுன்சிலிங் நடக்கும் மையத்தில் இருந்து கொண்டு அதில் வரும் ஆயிரக்கணக்கான கல்லூரிகளின் பட்டியலில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்தால் பொறியியல் பட்டம் மட்டும் தான் நமக்கு கிடைக்கும். இப்படி தரமற்ற கல்லூரிகளில் பொறியியல் பட்டம் பெறுவது வெறும் பட்டமாகத்தான் இருக்குமே தவிர, வாழ்க்கைக்குப் பயன்படாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும். 

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews