கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் மதிப்பெண் தரவரிசை பட்டியல் வரும் ஜூன் 1ம் தேதி வெளியிடப்படுகிறது.
கோவை அரசு கலைக்கல்லூரியில் 2018-19ம் கல்வியாண்டில் 21 இளங்கலை பட்ட படிப்புகளில் 1,359 இடங்கள் உள்ளன.
இந்த இடங்கள் நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த மாதம் 16ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை 8 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. இதையடுத்து மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கல்லூரியில் சமர்ப்பிக்க தொடங்கியுள்ளனர். 16ம் தேதி மட்டும் சுமார் ஆயிரம் பேர் விண்ணப்பத்தை கல்லூரியில் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில் விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் மே 29ம் தேதி கடைசி நாள். அன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் நிராகாிக்கப்படும்.
இதை தொடர்ந்து மாணவர்கள் மதிப்பெண் தரவாிசை பட்டியல் வரும் ஜூன் 1 தேதி www.gacbe.ac.in என்ற கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட உள்ளது. சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூன் 6ம் தேதி நடக்கிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் மகன், மகள், விடுதலை போராட்ட தியாகியின் மகன், மகள் ஆகிேயார் பங்கேற்க உள்ளனர். பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 7ம் தேதி முதல் துவங்குகிறது. ஞாயிறு நீங்கலாக ஜூன் 18ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. தமிழ் இலக்கியம், ஆங்கிலம் இலக்கியம் மற்றும் பிற பாடங்கள் என மூன்று பிரிவுகளில் கலந்தாய்வு நடக்கிறது. 2வது கட்ட கலந்தாய்வு குறித்து பின்னர் தெரிவிக்கப்பட உள்ளது. முதல் கட்ட கலந்தாய்வில் பங்ேகற்பவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், இன சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சான்றிதழ், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டுவர வேண்டும் என அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.