பிளஸ் 2 தேர்வில் 1165 மதிப்பெண் பெற்று சாதனை : உயர்கல்வி பயில வழியின்றி தவிக்கும் ஏழை மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 24, 2018

Comments:0

பிளஸ் 2 தேர்வில் 1165 மதிப்பெண் பெற்று சாதனை : உயர்கல்வி பயில வழியின்றி தவிக்கும் ஏழை மாணவி



அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, பிளஸ் 2 தேர்வில் 1169 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த ஆட்டோ ஓட்டுனர் மகள், உயர்கல்வி படிக்க வழியின்றி தவித்து வருகிறார். உதவும் கரங்களை எதிர்பார்த்து மாணவி காத்திருக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கீழ்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (55). ஆட்டோ ஓட்டுனர்.

 இவருடைய மனைவி பாக்யா (48). இவர்களுக்கு சிந்து (17) என்ற மகள் உள்ளார். அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்துள்ளார். ஆட்டோ ஓட்டி கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு வாழ்ந்து வரும் நடராஜன், தன்னுடைய மகளை உயர்நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.kaninikkalvi இதனால் கல்விக்காகவே குறிப்பிட்ட ஒரு தொகையை மகளுக்காக செலவழித்தார். 

தந்தை கனவை நிறைவேற்றும் வகையில், மாணவியும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார்.   அண்மையில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி சிந்து 1200க்கு 1165 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இங்கு 281 மாணவியர் தேர்வு எழுதியதில் 165 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தந்தை ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்துவதால், மேல் படிப்பை தொடர்வதா, வேண்டாமா? என்ற குழப்பத்தில் உள்ளார்.மேல்படிப்புக்கு அதிகப்படியாக செலவாகும் என்பதால், தான் நினைக்கும் உயர்கல்வியை படிக்க முடியாமல் போய்விடுமோ என்ற வேதனையிலும் மாணவி உள்ளார்.

இதுகுறித்து மாணவி சிந்து கூறியதாவது; என்னுடைய தந்தை ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்துகிறார்.  வாடகை வீட்டில் வசிக்கிறோம். தம்பி ஒருவர் உள்ளார். அப்பாவின் சொற்ப வருமானம் குடும்ப செலவுக்கே சரியாக போய்விடும். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1165 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளேன். இன்ஜினிரியங் மற்றும் கலைக்கல்லூரிக்கு செல்ல வேண்டுமானால் ஆயிரகணக்கில் பணம் செலவாகும். வசதியில்லாததால் அப்பாவை நான் தொந்தரவு செய்யவில்லை.  உயர்கல்வி பயில யாரிடம் சென்று கேட்பது என தெரியவில்லை, என்றார். உயர்கல்விக்கு உதவிட கருணை உள்ளங்கள் முன்வருமா? என்ற எதிர்பார்ப்பில் மாணவியும், அவரது பெற்றோரும் உள்ளனர்.


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews