மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- TRB நடவடிக்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 09, 2018

Comments:0

மதிப்பெண் முறைகேடு புகார் எதிரொலி TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு திடீர் ரத்து- TRB நடவடிக்கை.


 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 பேரின் மதிப்பெண் மாற்றப்பட்டு பெரும் முறைகேடு நடந்துள்ளதாக விசாரணை  நடந்து வரும் நிலையில், விரிவுரையாளர்கள் தேர்வை ரத்து செய்வதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி போட்டித் தேர்வு நடத்தியது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நவம்பர் 7ம் தேதி வெளியானது. அதன்படி தேர்வு எழுதியோருக்கான மதிப்பெண்கள் ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

அப்போது பிறந்த தேதியை அல்லது பதிவு எண் அளித்து தேர்வர்கள் தங்களின் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது தேர்வர்கள் சிலர் தங்களுக்கு தெரிந்தவர்களின் பதிவு எண்ணை இணையதளத்தில் அளித்து மதிப்பெண்ணை பார்த்த போது பட்டியலில் இருந்த மதிப்பெண்ணும், இணையதளத்தில் காட்டப்பட்ட மதிப்பெண்ணும் வேறுவேறாக இருந்தது.  இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றதாக 2000 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்ப டிஆர்பி முடிவு செய்திருந்தது. அப்போது தேர்வர்களின் மதிப்பெண் வெளியீட்டில் குளறுபடி நடந்துள்ளதாகவும், 200 பேரின் மதிப்பெண்கள் திருத்தப்பட்டிருப்பதாகவும் தேர்வு எழுதிய சிலர் தரப்பில் டிஆர்பிக்கு புகார் அளிக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் உயர்கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் இதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர். இதையடுத்து தேர்வு முடிவுகளை டிஆர்பி ரத்து செய்து புதிய தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக அறிவித்தது. புகார் தொடர்பாக கருத்துக்கூற டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்த நிலையில், தபால் மூலமும் நேரிலும் ஏராளமானோர் கருத்துகளை அனுப்பி இருந்தனர். மதிப்பெண் மாற்றம் தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் உமா போலீசில் டிசம்பர் 19ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் அன்றைய தினமே போலீசார் டிஆர்பி அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினர். முறைகேடு நடந்ததால் குறிப்பிட்ட விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் தேர்வர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது, விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து தேர்வு நடந்தது, முடிவுகள் வெளியிட்டது, அதில் யார் யார் பொறுப்பில் இருந்தனர், எங்கே தவறு நடக்க வாய்ப்புள்ளது, எப்படி தவறு செய்திருப்பார்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை டிஆர்பி நிர்வாகத்திடம் இருந்து போலீசார் தெரிந்து கொண்டனர்.

இந்த தவறுகள் கணினி மூலம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. தேர்வு நடந்து முடிந்ததும் அந்த தேர்வுக்கு பொறுப்பேற்ற அதிகாரிகள் சீலிட்டு தான் விடைத்தாள்களை டிஆர்பியில் ஒப்படைப்பார்கள். கணினியில் 1.33 லட்சம் பேரின் மதிப்பெண்கள் பதிவாகியுள்ளது. அவற்றை கணினியில் திருத்தம் செய்ய வாய்ப்பே இல்லை. முதல் மதிப்பெண் பட்டியலிலும், இரண்டாவது மதிப்பெண் பட்டியலிலும் 196 பேருக்கு மதிப்பெண்கள் மாறியுள்ளது பட்டியல் சரிபார்ப்பில் தெரியவந்தது.

 இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வந்த போலீசார் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளனர், ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்தது. அசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூலை 28ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டு, செப்டம்பர் 9ம் தேதி நடத்தப்பட்ட விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. தேர்வு தொடர்பான விளம்பரம் ேம மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும். ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குண்டர் சட்டத்தில் முக்கிய குற்றவாளி கைது;

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு ெதாடர்பாக, டிசம்பர் மாதம் 27ம் தேதி கிழக்கு முகப்பேரை ேசர்ந்த கால் டாக்ஸி டிரைவர் கணேசன்(38) கைது செய்யப்பட்டார். அதைதொடர்ந்து மதிப்பெண்களை பதிவிட்ட டேட்டா என்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த ஷேக் தாவூத் நாசர்(32) நீதிமன்றத்தில் சரணடைந்தார். விசாரணையில் அடுத்தடுத்து கைது தொடர்ந்தது. தனியார் நிறுவன மேலாளர் ரகுபதி(34) மற்றும் அயனாவரத்தை சேர்ந்த சுரேஷ் பால்(34), திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியர் சின்னசாமி(52) கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த பரமசிவம்(32), சிட்லபாக்கத்தை சேர்ந்த நாதன்(45) மற்றும் திருச்சியை சேர்ந்த திணேஷ்(26)ஆகிய 8 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த முறைகேட்டிற்கு மூளையாக செல்பட்ட தனியார் நிறுவன சுரேஷ் பால், கால் டாக்ஸி டிரைவர் கணேசன், தனியார் டேட்டா என்ட்ரி ஊழியர் ஷேக் தாவூத் நாசர்(32) ஆகிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான டேட்டா என்ட்ரி மேலாளர் ரகுபதி(34) போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தின் கீழ் நேற்று போலீசார் கைது ெசய்தனர்.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. எழுத்து தேர்வை ரத்து செய்து தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் பலர் முறைகேடாக பணம் கொடுத்து வேலை பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக 156 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டில் மீண்டும் தேர்வு எழுத்து தேர்வுக்கான மறுதேதி மே முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டணத்தை செலுத்தியவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.

 தேர்வு ரத்து ஏன்?

 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு விடைத்தாள் திருத்தப்பட்டதில் மோசடிநடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தேர்வை நடத்திய டேடா என்ட்ரி நிறுவனம் மூலமாக மோசடி நடந்தது அம்பலமானது. பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Official News Click Here To Download

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews