சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான பொது அறிவு திருவிழாவில் தேசிய முன்மாதிரி மாணவியாக அரசு பள்ளிமாணவி தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் கலந்த உணர்வுகளை அளித்துள்ளது.
விண்வெளி சம்பந்தமான பயிற்சிகளுக்கு மாணவ மாணவியரை தயார் செய்யும் நோக்கில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பும், சத்யபாமா இன்ஸ்டிடூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியும் இணைந்து பிப்ரவரி 2 ஆம் தேதி பொது அறிவு போட்டியை நடத்தின.இதில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 8, 9, 11 வகுப்பு மாணவ மாணவியரை உள்ளடக்கிய அணிகள் பங்கெடுத்தனர். ஐ.நா. சர்வதேச இளைஞர் கவுன்சில் உறுப்பினர், சர்வதேச க்விஸ் மாஸ்டர் ஜஸ்டின் இந்த போட்டிகளை நடத்தினார்.
இந்தியாவின் எதிர்கால தூண்களாக இளைஞர்களை செதுக்குதல் என்ற கருத்தை மையமாக வைத்து, சத்யபாமா பல்கலை கழகத்தில் இந்த போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியிலும் 2 பேர் வீதம் முதற்கட்ட போட்டி நடத்தப்பட்டு, 5 அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.இறுதியாக இந்த 5 அணிகளுக்கும் அறிவியல், விளையாட்டு,இலக்கியம், அரசியல், சுதந்திர போராட்டம், விரைவு சுற்று, முக்கிய நிகழ்வுகள் என பல சுற்றுகளாக போட்டிநடைபெற்றதோடு, இந்த 10 மாணவ மாணவியருக்கும் 2 நிமிட பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.பொது அறிவு மற்றும் பேச்சுப்போட்டியில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக்கொண்டு புனித ஜான்ஸ் பள்ளி மாணவர் எடிசன் முதற்பரிசை வென்றார்.
இதைதொடர்ந்து, இலங்கையில் நடைபெறும் சர்வதேச தலைமை பண்பு பற்றிய சர்வதேச கருத்தரங்கில் எடிசன் பங்கெடுக்கவுள்ளார்.பெண்கள் பிரிவில் திருவொற்றியூர் அரசு பள்ளி மாணவியர் தமிழ்செல்வி மற்றும் சாலினி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு தேசிய முன்மாதிரி மாணவியர் விருது வழங்கப்பட்டது. இவர்கள்டெல்லியில் நடைபெறும் 3 நாள் கருத்தரங்கில் பங்கெடுக்கவுள்ளனர்.இதற்கான அனைத்து செலவுகளையும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா ஏற்குமென அதன் இயக்குநர் சீமதி கேசன் தெரிவித்துள்ளார்.வேலம்மாள் பள்ளி மாணவர் வினய் முரளி பிரசாத், ஜி.டி.ஏ.வித்யா மந்திர் மாணவர் பவான் ஆகியோர் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாட்டின் சிறந்த இளைஞர் விருது - 2018 (யூத் ஐகான் அவார்ட் - 2018) வழங்கப்பட்டன.
மேலும்,. போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.பரிசுகளை சத்யபாமா பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறை இயக்குநர் ஷீலா ராணி, ஆசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இளம் வானவியலாளர் அஷ்டன்பால், இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீர சனுஷ் சூர்யதேவ் ஆகியோர் வழங்கினர்.
Search This Blog
Monday, February 05, 2018
Comments:0
தேசிய முன்மாதிரி மாணவியாக அரசு பள்ளி மாணவி!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.