Search This Blog
Friday, February 09, 2018
Comments:0
மார்ச், 1ல் துவங்க உள்ள, பொதுத்தேர்வு பணிக்கு, ஆசிரியர்கள், பணியாளர்கள் என, ஒரு லட்சம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க, 8,500 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், மார்ச், 1ல், பிளஸ் 2 தேர்வு துவங்கு கிறது. மார்ச், 7ல் பிளஸ் 1; மார்ச், 16ல், பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வுகள் நடக்கின்றன. இந்த தேர்வுக்கு, தமிழகத்தில், 2,756; புதுச்சேரியில், 38 என, 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 515 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'காப்பி' அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க, 8,500 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு உள்ளன.முதன்மை கண்காணிப்பாளர்களாக, 6,402 அதிகாரிகளும், கூடுதல் கண்காணிப்பாளர்களாக, 937 பேரும், தேர்வு அறையின் கண்காணிப்பாளர்களாக, 94 ஆயிரத்து, 880 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் உட்பட, தேர்வு பணியில், மொத்தம், 1.10 லட்சம் பேர் ஈடுபடுவர். இவர்களில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் அடங்குவர்.
'காப்பி' அடிப்பதை தடுக்க 8,500 பறக்கும் படைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.