Search This Blog
Friday, February 09, 2018
Comments:0
விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் உள்பட 133 கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம் கடந்த 2016-17-ஆம் கல்வி ஆண்டில் திரும்பப் பெறப்பட்டது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அந்த அவையில் வியாழக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா அளித்த எழுத்துப்பூர்வமான பதில்:
ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சிலின் (என்சிடிஈ) விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் நாடு முழுவதும் 133 ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அங்கீகாரம் கடந்த 2016-17-ஆம் கல்வியாண்டில் திரும்பப் பெறப்பட்டது.
தமிழகத்தில் 20 கல்வி நிறுவனங்கள், கர்நாடகத்தில் 29, மகாராஷ்டிரத்தில் 28, மத்தியப் பிரதேசத்தில் 17 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்பட்டது
இந்தப் பட்டியலில் தில்லியைச் சேர்ந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் இல்லை என்று அந்தப் பதிலில் உபேந்திர குஷ்வாகா குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு ஓராண்டு வரை அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது
தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.