150 ஆண்டுகளுக்கு பின் இன்று நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணத்தை சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் கண்டுகளித்தனர்
சுமார் 152 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் மூன், ப்ளு மூன், புளட் மூன் ஆகிய அரிய நிகழ்வுகளுடன் இந்த சந்திர கிரகணம் தோன்றியது. இதுபோன்றதொரு சந்திர கிரகணம் மீண்டும் 2028-ம் ஆண்டுதான் நிகழும் என்பதால் இன்றைய சந்திரகிரகணத்தை காண மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தின் பல இடங்களிலும் சமவெளிப் பகுதியில் மக்கள் சந்திர கிரகணத்தை காண குவிந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையிலும் சந்திர கிரகணத்தை காண மக்கள் திரண்டுள்ளனர்.
இதேபோல் சென்னை பிர்லா கோளரங்கத்திலும் சந்திர கிரகணத்தை காண மக்கள் குவிந்து வருகின்றனர். பிர்லா கோளரங்கத்தில் உள்ள தொலை நோக்கி மூலம் மக்கள் வரிசையில் சந்திர கிரகணத்தை கண்டுகளித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.