போராட்ட நாட்களை வரன்முறைப்படுத்த தீர்மானம்
நாமக்கல், ஜூன் 24
'சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்திய இடைநிலை, தொடக் கநிலை ஆசிரியர்களுக்கு, பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும் என, செயற் குழுவில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின், எருமப்பட்டி ஒன்றிய செயற் குழு கூட்டம், அலங்காநத் நத்தில் நடந்தது. ஒன்றிய துணைத்தலைவர் சித்ரா தலைமை வகித்தார்.
இலக் கிய அணி அமைப்பாளர் நாகேஸ்வரி வரவேற்றார். மாவட்ட துணை செய லாளர் கனகலிங்கம், செயற் குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில், இடைநிலை உபரி ஆசிரியர்களை, ஒன்றியத் திற்குள் இருக்கும் காலி பணியி டங்களுக்குள் மட்டுமே பணி யிட நிரவல் செய்ய வேண்டும். தொடக்க, நடுநிலை பள்ளி களின் ஆங்கில வழிக்கல்வி வகுப்புகளுக்கு, கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும். 'சம வேலைக்கு சம ஊதியம்' வலியுறுத்தி, இடைநிலை, தொடக்கநிலை ஆசிரியர்கள், கடந்த, ஜன.,ல் மேற்கொண்ட போராட்ட நாட்களை, பணி வரன்முறைப் படுத்தி, போராட்ட நாட் களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும்.
சட்டசபை தேர்தல் வாக் குறுதிப்படி, தமிழக அரசு, பழைய ஒய்வூதிய திட்டத்தை. ஆசிரியர், அரசு ஊழிய ருக்கு விரைந்து அமல்படுத்த வேண்டும். உறுதியளிப்பு
ஓய்வூதிய திட்டத்தின் கீழ், இடைக்கால பணம் வழங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். கடந்த, ஐந்தாண்டு காலமாக வழங்கப்படாத தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர் வுகளை வழங்கி, இடமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
his news article from Namakkal discusses a decision made by the Tamil Nadu Primary School Teachers' Association to regularize protest days.
The meeting, held in Erumapatty, resolved to demand "Equal Pay for Equal Work" for elementary teachers.
Other resolutions included filling vacancies in union schools, providing promotions, and implementing the old pension scheme.
The article also notes a requirement for schools to obtain DTCP approval

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.