Breaking

Monday, June 29, 2026

CBSE மும்மொழி கொள்கை விதிகள் வெளியீடு.



CBSE மும்மொழி கொள்கை விதிகள் வெளியீடு.

மும்மொழிக்கொள்கை தொடர்பான வழிகாட்டுதல்களை சி.பி.எஸ்.சி. இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்போது சிபிஎஸ்சி முறையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் புதிய மொழிக்கொள்கையை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது 7,8 மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்கு செல்லும் பொழுது 3-வது மொழியில் வாரியத்தேர்வு எழுத வேண்டியது இல்லை.

7,8,9-ம் வகுப்புகளில் ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படித்து வரும் மாணவர்கள் அவற்றை தொடலாம்; ஒரு இந்திய தாய் மொழியை கூடுதலாக கற்க வேண்டும்.

2026-2027-ம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்- சிபிஎஸ்இ மத்திய கல்வி வாரியம் (CBSE), தேசிய கல்விக் கொள்கை (NEEP 2020) மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF 2023) ஆகியவற்றின் அடிப்படையில் புதிய மும்மொழிக் கொள்கைக்கான (Three-Language Policy) விரிவான வழிகாட்டுதல்களை இன்று (ஜூன் 29, 2026) வெளியிட்டுள்ளது.

மே மாதம் வெளியிடப்பட்ட முந்தைய அறிவிப்பால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்த குழப்பங்களுக்கும், உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கும் தீர்வு காணும் வகையில் இந்த புதிய விதிகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்

1. தற்போதைய 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு (Exemption for Current Class 10)2026-27 கல்வியாண்டில் தற்போது 10ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு இந்தப் புதிய மும்மொழிக் கொள்கை பொருந்தாது.

அவர்கள் வழக்கம்போல தங்களின் இரு மொழி (Two-language system) முறையிலேயே பொதுத்தேர்வு எழுதலாம். 3வது மொழியைப் படிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

2. 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பெரும் தளர்வு (Relaxation for Classes 7, 8, 9)பொதுத்தேர்வு இல்லை:

2026-27 கல்வியாண்டில் 7, 8 மற்றும் 9ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வரும்போது 3வது மொழிக்கான (R3) போர்டு தேர்வை எழுத வேண்டியதில்லை. பள்ளி அளவிலான மதிப்பீடு:

இந்த மாணவர்களுக்கான 3வது மொழி மதிப்பீடு முற்றிலும் பள்ளி அளவிலான உள்மதிப்பீடாக (Internal Assessment) மட்டுமே இருக்கும்.

வெளிநாட்டு மொழிகள் சலுகை: ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளை (எ.கா: ஆங்கிலம் + பிரெஞ்சு) தேர்வு செய்து படித்து வரும் 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவர்கள், அதே சேர்க்கையைத் தொடர அனுமதிக்கப்படுவர்.

ஆனால், அவர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியைக் (Bhartiya Bhasha) கற்றுக்கொள்ள வேண்டும்.

3. 6ஆம் வகுப்பு முதல் முழுமையான அமல் (Full Implementation from Class 6)இந்த கல்வியாண்டில் (2026-27) 6ஆம் வகுப்பில் இணையும் மாணவர்களுக்கு இந்த மும்மொழி விதி முழுமையாகப் பொருந்தும்.அவர்கள் படிக்கும் மூன்று மொழிகளில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் (எ.கா: தமிழ், இந்தி, சமஸ்கிருதம் போன்றவை).

இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எட்டும்போது, 3வது மொழிக்கும் சேர்த்து போர்டு தேர்வு எழுத வேண்டும். சிறப்பு விலக்குகள் மற்றும் பிற விதிகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள்:

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு (CwSN) மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின்படி (RPwD Act, 2016) 2வது அல்லது 3வது மொழியைக் கற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

வெளிநாட்டுப் பள்ளிகள்: வெளிநாடுகளில் செயல்படும் CBSE பள்ளிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பும் மாணவர்களுக்கு 2 இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என்ற விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் மாறுபவர்கள்:

பெற்றோர் பணிமாறுதல் காரணமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் மாணவர்கள், தாங்கள் ஏற்கனவே படித்து வந்த மொழிச் சேர்க்கையையே (Language combination) தொடரலாம்.

ஆசிரியர்கள் பற்றாக்குறை: 3வது மொழியைக் கற்பிக்கப் போதிய ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள், தற்காலிகமாகப் பகுதிநேர ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அல்லது ஆன்லைன்/ஹைப்ரிட் முறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog