Breaking

Saturday, May 30, 2026

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி - ஜூன் 1 முதல் முக அடையாள வருகைப்பதிவேடு கட்டாயம்



அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு கிடுக்கிப்பிடி - ஜூன் 1 முதல் முக அடையாள வருகைப்பதிவேடு கட்டாயம் - Gov't Letter Tamil Nadu Government Tightens Grip on Government Employees: Facial Recognition Attendance Mandatory from June 1st – Government Letter

அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மனித வளத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் மற்றும் பேஸ் ஐடி மூலம் வருகை பதிவேட்டு முறை வருகிற ஜூன் 1ம் தேதி முதல் கண்டிப்பாக நடைப்பிடிக்க வேண்டும்.

காலை 10 மணிக்கு முன்னர் ஊழியர்கள் பணிக்கு வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் வருகையை பயோ மெட்ரிக்கில் பேஸ் ஐடி மூலமும், பதிவேடு மூலமும் கணக்கிட வேண்டும். மறு உத்தரவு வரும்வரை இந்த முறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தற்போது பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படுவது மூலம் உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எவ்வளவு பேர், எத்தனை மணிக்கு பணிக்கு வருகின்றனர். தாமதமாக எவ்வளவு பேர் வருகின்றனர் என்பதை தன்னிடம் உள்ள கம்ப்யூட்டரில் தெரிந்து கொள்ளலாம். இதனால் ஒவ்வொரு ஊழியர்களும் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்றனர் அரசு உயர் அதிகாரிகள் தலைமைச் செயலக வரலாற்றிலேயே முதன்முறையாக, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஜூன் 1 முதல் பயோமெட்ரிக் அல்லது முக அடையாள (Facial Recognition) வருகைப்பதிவேடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சரியான நேரத்திற்குப் பணிக்கு வருவதை உறுதி செய்யும் நோக்கில், முதற்கட்டமாக மனிதவள மேலாண்மைத் துறை (HRM Department) ஊழியர்களுக்கு இந்த புதிய டிஜிட்டல் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படுகிறது.

📌 முக்கிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள்:

காலை 10 மணிக்குள் வருகை: அனைத்துப் பணியாளர்களும் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்து தங்களது வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

இரட்டைப் பதிவு முறை: ஊழியர்கள் வழக்கம்போல மேனுவல் (Manual) வருகைப்பதிவேட்டில் கையெழுத்திடுவதோடு, முக அடையாள அல்லது பயோமெட்ரிக் முறையிலும் தங்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும்.

அடையாள அட்டை கட்டாயம்: பணியில் இருக்கும் போது அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களது அடையாள அட்டையை (ID Card) கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

படிப்படியான விரிவாக்கம்: இந்த புதிய நடைமுறை முதற்கட்டமாக மனிதவள மேலாண்மைத் துறையில் தொடங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக தலைமைச் செயலகத்தின் மற்ற அனைத்துத் துறைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog