ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கு மே 2 வரை விண்ணப்பிக்கலாம்
: மே 17-ம் தேதி நடைபெறும் ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நாளை (ஏப்.23) தொடங்குகிறது.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படுகிறது.
2026-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பிரதானத் தேர்வு மே 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு நாளை (ஏப்.23) தொடங்குகிறது. தகுதியான மாணவர்கள் https://jeeadv.ac.in இணையதளம் வாயிலாக மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டில் இத்தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்துகிறது. காலை, மதியம் என 2 தாள்களாக தேர்வு நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் சேர்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலம் ஒதுக்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
JEE பிரதான தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பம்: மே 2 வரை அவகாசம்
மே 17-ம் தேதி நடைபெறும் ஜேஇஇ பிரதானத் தேர்வுக்கான வி்ண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இது முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டமாக நடத்தப்படுகிறது.
2026-ம் ஆண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பிரதானத் தேர்வு மே 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு இன்று (ஏப்.23) தொடங்குகிறது. தகுதியான மாணவர்கள் https://jeeadv.ac.in இணையதளம் வாயிலாக மே 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டில் இத்தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்துகிறது. காலை, மதியம் என 2 தாள்களாக தேர்வு நடைபெறும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிக்களில் சேர்க்கை இடங்கள் கலந்தாய்வு மூலம் ஒதுக்கப்படும். இதுபற்றிய கூடுதல் விவரங்களை மேற்கண்ட தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Friday, April 24, 2026
JEE பிரதான தேர்வுக்கு மே 2 வரை விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.