Breaking

Friday, April 03, 2026

விஜய் பிரச்சாரத்தால் பள்ளி அருகே இடையூறு: 10-ம் வகுப்பு தேர்வு எழுத 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்



விஜய் பிரச்சாரத்தால் பள்ளி அருகே இடையூறு: 10-ம் வகுப்பு தேர்வு எழுத 30 நிமிடங்கள் கூடுதல் அவகாசம் Disruption Near School Due to Vijay's Campaign: 30 Minutes of Extra Time Granted for 10th Grade Exam

​திருச்​சி​யில் தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தால் இடையூறு ஏற்​பட்​ட​தால், அதன் அரு​கில் இருந்த அரசுப் பள்​ளி​யில் 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு எழு​திய மாணவர்​களுக்கு கூடு​தலாக 30 நிமிடங்​கள் அவகாசம் வழங்​கப்​பட்​டது.

திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிடு​வதற்​காக தவெக தலை​வர் விஜய், பாலக்​கரை பழைய மதுரை சாலை​யில் உள்ள மாநக​ராட்சி 2-வது மண்டல அலு​வல​கத்​தில் நேற்று வேட்​புமனு தாக்​கல் செய்​தார்.

பின்​னர், அதன் அரு​கில் உள்ள மரக்​கடை எம்​ஜிஆர் சிலை பகு​தி​யில் பிற்​பகல் 12.30 மணி​யள​வில் வேனில் இருந்​த​வாறு பிரச்​சா​ரம் செய்​தார். இதற்​காக நேற்று காலை முதலே ஆயிரக்​கணக்​கான தொண்​டர்​கள் அங்கு திரண்டு கூச்​சலிட்​டுக் கொண்​டிருந்​தனர். விஜய் பிரச்​சா​ரம் செய்த இடம் அருகே சையது முர்​துஷா அரசு மேல்​நிலைப்​பள்ளி உள்​ளது. இப்​பள்​ளி​யில் 10-ம் வகுப்பு மாணவர்​கள் 170 பேர் நேற்று பொதுத்​தேர்வு எழு​தினர். இத்​தேர்​வுக்கு இடையூறு ஏற்​படக்​கூ​டாது என்​ப​தற்​காக விஜய் வரு​கைக்கு முன்​ன​தாக ஸ்பீக்​கர் பயன்​படுத்​தக்​கூ​டாது என போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யிருந்​தனர்.

அதேவேளை​யில், விஜய் அங்கு பிரச்​சா​ரத்​துக்​காக வந்​த​ போது ஸ்பீக்​கர் மூலம் தவெக பிரச்​சா​ரப் பாடல் ஒலிபரப்​பப்​பட்​டது. விஜய் அங்கு சுமார் 20 நிமிடங்கள் பிரச்சாரம் செய்​து​விட்டு பிற்​பகல் 1 மணி​யள​வில் அங்​கிருந்து புறப்​பட்​டுச் சென்​றார். இதனால் 10-ம் வகுப்பு தேர்வு எழு​திய மாணவர்​களுக்கு இடையூறு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, மாவட்ட தேர்​தல் நடத்​தும் அலு​வலரும், மாவட்ட ஆட்​சி​யரு​மான வே.சர​வணனிடம் மாவட்ட முதன்மை கல்வி அலு​வலர் கிருஷ்ணப்​பிரியா அனு​மதி பெற்று அந்​தப் பள்​ளி​யில் 10-ம் வகுப்பு தேர்வு எழு​திய மாணவர்​களுக்கு மட்​டும் கூடு​தலாக 30 நிமிடம் தேர்வு எழுத சிறப்பு அனு​மதி வழங்​கி​னார். இதையடுத்து பிற்​பகல் 1.15 மணிக்கு முடிய வேண்​டிய தேர்வு 1.45க்குதான் முடிந்​தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog