சுயநிதி படிப்புகளுக்கான கட்டணத்தை 10% உயர்த்த சென்னை பல்கலை. ஒப்புதல் University of Madras Approves 10% Fee Hike for Self-Financing Courses
சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக நிர்வாக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளரும், உயர்கல்வித் துறையின் செயலருமான பொ.சங்கர், ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரும், ஆங்கில இலக்கியத் துறையின் தலைவருமான பேராசிரியர் எஸ்.ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் தலைமை வகித்தனர். பல்கலைக்கழக பதிவாளர் ரீட்டா ஜான் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், சுயநிதி படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்த உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்
மேலும், தனியார் கல்லூரி முதல்வர் நியமன அனுமதி, கிறிஸ்தவியல் தொடர்பான 2 சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக சிண்டிகேட் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மேலும், தற்போது சென்னை பல்கலைக்கழக இணைப்பு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் அடையாறு டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியை, வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது
Friday, April 03, 2026
சுயநிதி படிப்புகளுக்கான கட்டணத்தை 10% உயர்த்த சென்னை பல்கலை. ஒப்புதல்
Madras High Court order
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.