Breaking

Tuesday, March 24, 2026

நிகழாண்டில் தமிழகத்தின் 30 நகரங்களில் நீட் தோ்வு மையங்கள்!



நிகழாண்டில் தமிழகத்தின் 30 நகரங்களில் நீட் தோ்வு மையங்கள்! NEET Exam Centers in 30 Cities Across Tamil Nadu This Year!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்காக தமிழகத்தில் 30 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.

அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் மே 3-ஆம் தேதி பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 552 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், திருச்சி, மதுரை, கோவை உள்பட 30 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், ரியாத், சிங்கப்பூா் உள்ளிட்ட 16 இடங்களில் தோ்வு நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 11-ஆம் தேதி நிறைவடைந்தது.

இதுவரை 23 லட்சத்துக்கும் மேற்பட்டோா் இந்தியா முழுவதும் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

நடப்பு கல்வியாண்டில் (2024), தமிழகத்தில் மொத்தம் 31 நகரங்களில் நீட் (NEET-UG) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளை விட மாணவர்களின் வசதிக்காகத் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் தகவல்கள்:

தேர்வு மையங்கள் உள்ள நகரங்கள்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களுடன், தற்போது செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல் போன்ற மாவட்டத் தலைநகரங்களிலும் மையங்கள் உள்ளன.

தேர்வு தேதி: மே 5, 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

மொழிகள்: தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தேர்வை எழுதலாம்.

பதிவு நிலவரம்: இந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர், இதில் தமிழகத்திலிருந்து கணிசமான மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தின் துல்லியமான முகவரியை தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிடும் அட்மிட் கார்டு (Admit Card) மூலம் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு exams.nta.ac.in/NEET என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog