Breaking

Monday, February 09, 2026

அரசு மாதிரி பள்ளிகளில் அட்மிஷன் துவங்குகிறது

அரசு மாதிரி பள்ளிகளில் அட்மிஷன் துவங்குகிறது

அரசு மாதிரி பள்ளிகளில் பிப்., இரண்டாவது வாரத்தில், 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக செயல்படும் வகையில் மாதிரி பள்ளிகள், மாவட்டத்துக்கு ஒன்று வீதம், 2022ல் துவங்கப்பட்டது. நவீன உள்கட்டமைப்பு, உறைவிட வசதி, மற்றும் நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி, உயர்கல்வியில் சேர ஊக்கம் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் மாதிரி பள்ளிகள் வழங்கி வருகிறது.

இத்தகைய பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவங்குவது வழக்கம். அவ்வகையில், மாதிரி பள்ளிகளில் பிப்., இரண்டாவது வாரத்தில், 2026 - 2027ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனரகம், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாதிரி பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவர் குறித்த விபரம் சேகரிக்க வேண்டும்.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை பிப்., இரண்டாவது வாரமே துவங்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைத்து, மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்; அட்மிஷன் துவங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது அரசு மாதிரி பள்ளிகளில் அட்மிஷன் துவங்குகிறது

தமிழகத்தில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான அரசு மாதிரிப் பள்ளிகள் (Government Model Schools) மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்த முக்கியத் தகவல்கள் இதோ:

சேர்க்கை தொடக்கம்: 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்குகிறது.

தேர்வு முறை: மாணவர்கள் நுழைவுத் தேர்வு அல்லது முந்தைய வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சிறப்பம்சங்கள்: நவீனக் கட்டமைப்புடன் கூடிய இந்தப் பள்ளிகளில் JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளுக்குச் சிறப்புப் பயிற்சிகளும், உண்டு உறைவிட வசதிகளும் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலம் அல்லது அரசு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுவார்கள்.

பிற பள்ளிகளுக்கு முன் னுதாரணமாக செயல் படும் வகையில் மாதிரி பள்ளிகள், மாவட்டத்துக்கு ஒன்று வீதம், 2022ல் துவங் கப்பட்டது.

நவீன உள்கட்டமைப்பு, உறைவிட வசதி, மற்றும் நீட், ஜே.இ.இ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி, உயர் கல்வியில் சேர ஊக்கம் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் மாதிரி பள்ளிகள் வழங்கி வருகிறது.

இத்தகைய பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை துவங்குவது வழக்கம். அவ்வகையில், மாதிரி பள்ளிகளில் பிப்., இரண்டாவது வாரத்தில் 2026 2027ம் கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க்கை துவங்க அறி வுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை

இயக்குனரகம், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை யில், 'அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் மாதிரி பள்ளியில் சேர்க்க வேண்டிய மாணவர் குறித்த விபரம் சேகரிக்க வேண்டும். ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை பிப்., இரண் டாவது வாரமே துவங்க வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலு வலர், வட்டாரக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் அடங்கிய குழு அமைத்து, மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து ஆலோ சனை கூட்டம் நடத்த வேண்டும்; அட்மிஷன் துவங்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட வழி காட்டுதல்கள் வழங்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog