7.36 லட்​சம் பேர் எழு​திய நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 06, 2026

Comments:0

7.36 லட்​சம் பேர் எழு​திய நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு



7.36 லட்​சம் பேர் எழு​திய நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

பல்​கலைக்​கழகங்​கள், கல்​லூரி​களில் உதவிப் பேராசிரிய​ராக பணிபுரிய​வும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான (ஜேஆர்​எஃப்) மத்​திய அரசின் உதவித் தொகை பெற​வும், பிஎச்டி மாணவர் சேர்க்​கைக்​கும் தேசிய தகு​தித் தேர்​வில் (நெட்) தேர்ச்சி பெற வேண்​டும்.

தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) சார்​பில் ஜூன், டிசம்​பர் என ஆண்​டுக்கு 2 முறை கணினி வழியில் இந்த தேர்வு நடத்​தப்​படு​கிறது. அதன்​படி, 2025-ம் ஆண்​டுக்​கான 2-ம் கட்ட யுஜிசி நெட் தேர்வு கடந்த டிச.31 முதல் ஜன.7-ம் தேதி வரை பாட​வாரி​யாக நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 9.94 லட்​சம் பட்​ட​தா​ரி​கள் விண்​ணப்​பித்த நிலை​யில், 7.36 லட்​சம் பேர் மட்​டுமே தேர்வு எழு​தினர்.

தேர்வு முடிவு களை ugcnet.nta.nic.in என்ற இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம். கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in என்ற தளத்​தில் அறிய​லாம் என்​று என்​டிஏ வெளி​யிட்ட அறி​விப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews