கருத்து கேட்பு கூட்டம் போதும் இடைநிலை ஆசிரியர்கள் கோபம்
ஓய்வூதியம் குறித்த கடைசி ஆலோசனை கூட்டம் முடிந்தது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஊரக வளர்ச்சி துறை செய லர் ககன்தீப் சிங் பேடி தலைமை யில குழு அமைக்கப்பட்டது. இக்கு ழுவின் கடைசி கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு பட்டதாரி ஆசி ரியர் கூட்டணி உட்பட 22 அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்று, பழைய ஓய்வூதிய திட் டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து கோரிக்கை வைத்தனர். இக்குழு, வரும் 10ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என, அரசு உத் தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த கோரி, சி.பி. எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில், தற் செயல் விடுப்பு போராட்டம் நடத் தப்பட்டது. ஆனால், தலைமைச் செயலகத்தில், 95 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்ததாக, அதிகாரிகள் தெரி வித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.