Breaking

Saturday, September 13, 2025

சிறப்பாசிரியர்கள் போராட்டம் வாபஸ்



சிறப்பாசிரியர்கள் போராட்டம் வாபஸ்

அதிகாரிகள் அளித்த உறுதிமொழியால் சிறப்பாசிரியர்கள் போராட்டம் வாபஸ்

பணி நிரந்தரம் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத் தில் ஈடுபட்ட சிறப்பாசிரி யர்கள், அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று, தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

அறிவுத்திறன், செவித் திறன், கற்றல் குறைபாடு பாதிப்புடைய மாணவர் களுக்கு கல்வி கற்பிக்க. கடந்த 2022ம் ஆண்டில், 23,000 ரூபாய் தொகுப் பூதியத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் களில், 1,700 சிறப்பாசிர் வர்கள் நியமனம் செய்யப் பட்டனர். 2வது நாளாக நேற்று, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற னர். உடனடியாக, போலீ சார், அவர்களை கைது செய்து, கீழ்ப்பாக்கம், மயி லாப்பூர், பட்டினப்பாக்கம் சமூக நலக்கூடங்களில் அடைத்து வைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.

அதன்பின் அவர்களு டன் பேச்சு நடத்த அரசு சார் பில், அழைப்பு விடுக்கப் பட்டது. சங்கத் தலைவர் சேதுராமன் தலைமையி வான மாநில நிர்வாகிகளு டன், தலைமைச் செயலகத் தில் பள்ளிக் கல்வித் துறை செயலர் சங்கர் பேச்சு நடத் தினார்.

அப்போது, தொழி வாளர் வருங்கால வைப்பு நிதியான இ.பி.எப். பிடித்தம், ஊதிய உயர்வு ஆகிய கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளிக்கப் பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சிறப்பாசிரியர்கள் தொடர் முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றனர் போலீசுக்கு மூச்சிறைப்பு

முன்னதாக நேற்று காலை சென்னை, மெரினா கடற்ரை எழிலகம் அருகே சிறப்பாசிரியர்கள் கூடி வர். அவர்களை சுற்றிவளைத்த போலீசார் சிலரை கைது செய்தனர். ஆனால் பல ஆசிரியர்கள், மெரினா கடற்கரை மணற்பரப்புக்குள் சென்ற னர். அவர்களை பிடிக்க முயன்றபோது போலீசா ருக்கு மூச்சிறைப்பு ஏற்பட்டது. போலீசாரை திசை திருப்பி சிறப்பாசிரியர்கள் பிரிந்து சென்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog