மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 20, 2025

Comments:0

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு



மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு

தமிழக அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று அரசு அமைத்த குழு​விடம் அரசு ஊழியர்​ - ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​கள் வலி​யுறுத்​தினர். அதோடு தங்​கள் கருத்​துகளை அறிக்கை​யாக சமர்ப்​பித்​தனர்.

பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் மத்​திய அரசு அண்​மை​யில் அறி​முகப்​படுத்​தி​யுள்ள ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்​பிக்க மூத்த ஐஏஎஸ் அதி​காரி​யான ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​தது. அந்த குழு தனது அறிக்​கையை வரும் செப். 30-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது.

இந்​தச் சூழலில் ஆக. 18, 25, செப். 1, 8 என 4 நாட்​கள் கருத்​துகேட்பு கூட்​டம் நடந்​தது. அதன்​படி முதல் சுற்று கூட்​டத்​தில் தலை​மைச் செயலக சங்​கம், தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யம், தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கம், தமிழ்​நாடு அலு​வலக உதவி​யாளர் மற்றும் அடிப்​படை பணி​யாளர் சங்​கம், தமிழ்​நாடு ஆரம்​பப்​பள்ளி ஆசிரியர் கூட்​ட​ணி, தமிழ்​நாடு முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் சங்​கம் உள்பட 40 சங்​கங்​களின் நிர்​வாகி​கள் குழு​வின் தலை​வ​ரான ககன்​தீப் சிங் பேடியை சந்​தித்து மனு அளித்​தனர். அப்​போது அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று வலி​யுறுத்​தினர்.

தலை​மைச் செயலக சங்க மாநில தலை​வர் கு.வெங்​கடேசன், செய​லா​ளர் சு.ஹரிசங்​கர் ஆகியோர் சமர்ப்​பித்த அறிக்​கை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது 100 சதவீதம் சாத்​தி​யமே. சிபிஎஸ் திட்​டத்​தில் பணி​யாற்றி ஓய்​வு​பெற்​றுள்ள 45,625 பேருக்கு ஒரு பைசாகூட ஓய்​வூ​தி​ய​மாக கிடைக்​க​வில்​லை. அரசுக்கு கூடு​தல் செல​வினம்​தான் ஏற்​படும். எனவே அத்​திட்​டத்தை அரசு பரிசீலிக்​கக் கூடாது. சிபிஎஸ் திட்​டத்​தில் உள்ள அரசு ஊழியர்​களை சேமநல நிதி திட்​டத்​தில் (ஜிபிஎப்) இணைத்​து, அனை​வரை​யும் தமிழ்​நாடு ஓய்​வூ​திய விதி​களின்​கீழ் கொண்டு வர வேண்​டும். சிபிஎஸ் திட்​டத்​தில் ஏற்​கெனவே ஓய்​வு​பெற்​றவர்​களுக்​கும் ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யம் பணிக்​கொடை வழங்க வேண்​டும்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. பட்​ட​தாரி ஆசிரியர் கழகத்​தின் கவுரவ தலை​வர் அ.மாய​வன், தொழிற்​கல்வி ஆசிரியர் கழக மாநிலத்​தலை​வர் செ.​நா.ஜ​னார்த்​தனன், முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் கழக மாநிலத்​தலை​வர் எஸ்​.பிர​பாகரன், பொதுச்​செயலாளர் பொ.அன்​பழகன், தமிழ்​நாடு ஆரம்​பப்​பள்ளி ஆசிரியர் கூட்​டணி மாநில பொதுச்​செய​லா​ளர் ச.ம​யில் ஆகியோர் அளித்த அறிக்​கையில், “நிதி பற்​றாக்​குறை​யால் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​த​வில்லை என்று வாதம் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது” என்​றனர்.

நேற்​றைய கருத்​துகேட்பு கூட்​டத்​தில் பங்​கேற்ற அனைத்து அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​களும் மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்​த வேண்​டும்​ என்​று வலி​யுறுத்​தினர்​.


ஓய்வூதிய ஆய்வு குழு அறிக்கை என்னாச்சு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தினர் கேள்வி

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் செயல்பாடுகளை, அரசு விரைந்து தெளிவு படுத்த வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2003ம் ஆண்டு ஏப்., 1ம் தேதிக்கு முன்பு இருந்த, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த கோரி, ஜக்டோ - ஜியோ, டிட்டோ ஜாக், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 80 சங்கங்கள், நீண்ட நாட்களாக போராடி வருகின்றன. இந்நிலையில், ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இந்த குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களிடம் நான்கு நாட்கள் கருத்துகளைக் கேட்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட கடித எண்ணில், ஆண்டைக் குறிக்கும் வகையில் 2025-2031 என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இதனால், குழுவின் அறிக்கை 2031ல்தான் சமர்ப்பிக்கப்படுமா என்று சந்தேகம் எழுவதாக, ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த குழு தனது அறிக்கையை, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்காமல், 2031 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சமர்ப்பிக்கும் போல் தெரிகிறது.

ஓய்வூதியக் குழு அமைக்கப்பட்டதும், சங்கங்களுடன் கூட்டம் நடத்துவதும், கண்துடைப்பாக இருக்கலாம். குழுவின் செயல்பாடுகள் குறித்து, அரசு விரைந்து தெளிவுபடுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews