TNPSC குரூப் - 1 தேர்வு வினாத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு ஏன்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 19, 2025

Comments:0

TNPSC குரூப் - 1 தேர்வு வினாத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு ஏன்?



TNPSC குரூப் - 1 தேர்வு வினாத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு ஏன்?

குரூப் - 1 தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளில், வழக்கத்தைவிட, 26 பக்கங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தன.

துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணியிடங்களுக்கான குரூப் - 1 தேர்வு, தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. வழக்கமான குரூப் - 1 தேர்வுகளைவிட, இம்முறை வினாத்தாள் பக்கங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:

குரூப் - 1 தேர்வுக்கான வினாத்தாள், 130 பக்கங்களை கொண்டிருக்கும். இம்முறை, 26 பக்கங்கள் வரை அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 156 பக்க வினாத்தாள் கொடுக்கப்பட்டிருந்தது. மொத்த கேள்வி எண்ணிக்கை, எப்போதும் போல, 200 தான். கூற்று - காரண கேள்விகள் எண்ணிக்கை அதிகரித்ததே, பக்கங்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணம். வழக்கத்தைவிட, ஐந்து முதல் ஆறு கூற்று, காரண வினாக்கள் கூடுதலாக கேட்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பயிற்சிகள் பெற்று, வினாவை விரைவாகவும், அதேநேரம் ஆழமாகவும் படித்து உணர்வோரால், கூற்று - காரண வினாக்களுக்கான சரியான பதிலை, குறித்த நேரத்துக்குள் தேர்வு செய்து விடுவர். முதல் முறை தேர்வு எழுதுவோருக்கு இத்தகைய வினாக்கள் சற்று கடினமாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், குரூப் -1 தேர்வு முடிவுகள், இரண்டு மாதத்துக்குள் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பணியாளர் தேர்வாணைய தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews