Breaking

Sunday, April 27, 2025

டான்செட், சீட்டா தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலை. வெளியீடு



டான்செட், சீட்டா தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலை. வெளியீடு

முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடப்பாண்டு முதல் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த மார்ச் 22-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் எம்பிஏ தேர்வை 20,992 பேரும், எம்சிஏ தேர்வை 9,699 பேரும் எழுதினர்.

தொடர்ந்து சீட்டா தேர்வு மார்ச் 23-ல் நடைபெற்றது. இந்த தேர்வை 4,632 மாணவர்கள் எழுதினர். இந்நிலையில் டான்செட் மற்றும் சீட்டா தேர்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஏப்.25) வெளியிட்டது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதன்பின்னர் மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை மேற்கண்ட வலைத்தளத்தில் இருந்து மே 7 முதல் ஜூன் 6-ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் tanceeta@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் மாதம் நடைபெறும். என்று பல்கலை. அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog