அரசுப் பணி தேர்வுக்கு வரும் 27ம் தேதி முதல் இலவச பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 16, 2025

Comments:0

அரசுப் பணி தேர்வுக்கு வரும் 27ம் தேதி முதல் இலவச பயிற்சி

திருமா பயிலகத்தில் அரசு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

அரசுப் பணி தேர்வுக்கு வரும் 27ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதாக விசிக தலைவரும், திருமா பயிலகத்தின் காப்பாளருமா ன திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் ‘திருமா பயிலகம்’ இயங்கி வருகிறது. இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக அரசு வேலை வாய்ப்புகளு க்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். இங்கு பயின்ற பலர், அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த பயிலகத்தில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-1, 2, 2ஏ, 4, விஏஓ, உதவி ஆய்வாளர் ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 27ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, மேலும் பல பகுதிகளிலும் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. அதன் விவரம்:

அங்கனூர் (9843660449), ஜெயங்கொண்டம் (9952860844), சிதம்பரம் (9655746475), திருப்போரூர் (7092521698), கும்பகோணம் (7904832410) , திருவாரூர் (8825995117), திருச்செந்தூர் (8675590803), கள்ளக்குறிச்சி (9843702449), நாகப்பட்டினம் (9787825382), நெடுங்குளம் (7639091631), புதுக்கோட்டை (9443903727), குறிஞ்சிப்பாடி (9042991182), மதுராந்தகம் (9566227765), திண்டிவனம் (9043751262),

வடலூர் (9942389886), திருச்சி (8508082300), தஞ்சாவூர் (9600792241), மணப்பாறை (9942559977). இங்கு நடைபெற உள்ள பயிற்சி வகுப்புகள் குறித்து மேற்கண்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அறியலாம். மேலும் விவரங்களுக்கு 8610392275 என்ற செல்போன் எண் அல்லது thirumapayilagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews