Breaking

Monday, October 07, 2024

பிச்சை எடுத்த ஊரில் இன்று மருத்துவர் : படிப்பு செய்யும் அதிசயம்



பிச்சை எடுத்த ஊரில் இன்று மருத்துவர் : படிப்பு செய்யும் அதிசயம்

பிங்கி ஹர்யானி. ஹிமாச்சல் பிரதேசத்தின் மெக்லயோத்கன்ஸ் என்ற பிரபலமான சுற்றுலா தளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்து வந்தார்

அவரது மோசமான நிலையை கண்ட புத்த மதத்துறவி ஜம்யாங் பிங்கியை படிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

தங்கள் குடும்பத்தின் வறுமை காரணமாக பிங்கியின் பெற்றோர் முதலில் சம்மதிக்காமல் இருந்த நிலையில், அவர்களை பேசி சம்மதிக்க வைத்து பிங்கியை பள்ளிக்கூடத்திலும் சேர்த்துள்ளார்

பிச்சை எடுத்த சிறுமி என்பதால் ஆரம்ப காலகட்டங்களில் கடும் சோதனைகளுக்கு ஆளாகி இருக்கிறார்.

பின்னர் படிப்பின் தீவிரத்தை புரிந்து கொண்ட பிங்கி தொடர்ந்து படித்து தற்போது மருத்துவராக பட்டம் பெற்று எந்த இடத்தில் கையேந்தி யாசகம் பெற்றாரோ அதே நகரத்து வாசிகளின் கைகளைப் பிடித்து இன்று மருத்துவம் பார்க்கிறார்

படித்தால் ஒரு குடும்பம் முன்னேறும் அதுவும் பெண் படித்தால் ஒரு சமூகமே முன்னேறும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog