Breaking

Saturday, May 18, 2024

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வு ஒத்திவைப்பு.



விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வு ஒத்திவைப்பு.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு.

தேர்வு மே 20 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது; கனமழை எச்சரிக்கையால் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு.

தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் -என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கைக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான மாநில அளவிலான தேர்வுகள் 20-05-2024 முதல் 25-05-2024 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை அறிவிப்பினை தொடர்ந்து, இத்தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog