Important details of the meeting for the pensioners association executives held regarding income tax deduction under the chairmanship of the district treasury officer... மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக நடைபெற்ற ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டத்தின் முக்கிய விவரங்கள்...
நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கருவூல அலுவலர் தலைமையில் வருமான வரி பிடித்தம் தொடர்பாக ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது..
முக்கிய விவரங்கள்:
1. ஓய்வூதியம் மாதம் 62500 கீழ்.... வருடத்திற்கு 7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு... புதிய திட்டத்தின் கீழ் வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.
2. மாதம் ரூபாய் 62501 க்கு மேல்... வருடத்திற்கு ஏழு லட்சத்தி 50 ஆயிரத்து ஒன்றுக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.
3. இதன்படி மூன்று லட்சத்திற்கு மேல் ஆறு லட்சத்திற்குள் 5%
4. ஆறு லட்சத்துக்கு மேல் 9 லட்சம் வரை 10% 5. ஒன்பது லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீதம்
6. 12 லட்சம் முதல் 15 லட்சம் வரை 20 சதவீதம்
7. இவ்வாறு கூடிக்கொண்டே போகும்
8. அனைத்து ஓய்வூதியம் பெறும் அலுவலர்களும்.. பான் நம்பர்... ஆதார் நம்பர்.. ரேஷன் கார்டு.. உடனடியாக இணைக்கப்பட வேண்டும்.
9. இணைக்கவில்லை எனில் இந்த மாத ஓய்வூதியம் கிடைக்கப் பெறாது.
10. அனைவரும் "களஞ்சியம் ஆப்" டவுன்லோட் செய்து ஓய்வூதிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.
11. மேலும் பான் நம்பரும் இணைத்துக் கொள்ளலாம்.
12. தெரியாத அலுவலர்கள் மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலை கருவூல அலுவலகத்தை அணுகி பான் நம்பரை இணைத்துக் கொள்ளலாம்.
13. குடும்ப ஓய்வூதிய காரர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.
14. பான் எண் இணைக்க இந்த மாதம் பத்தாம் தேதி கடைசி நாள் ஆகும்.. 15. வருமான வரி பிடித்தல் செய்வதற்கு இரண்டு முறைகள் உள்ளன ஒன்று பழைய முறை.
16. புதிய முறை இரண்டாவது முறையாகும்.
17. புதிய முறையில் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியம்.+ அகவிலைப்படி + மருத்துவ படி.. இதன் கூட்டுத்தொகை மாதம் ஒன்றிற்கு ரூபாய் 62,500 க்கு மேல் இருப்பின் வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.. வேறு எந்த கழிவுகளும் கிடையாது..
18. ரூபாய் 62,500 க்கு கீழ் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் இரண்டாவது முறையே சிறப்பானதாகும்...
19. மாதம் ரூபாய் 62,500 க்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் பழைய முறையா புதிய முறையா என்று ஆலோசித்து அதற்கேற்ப வருமான வரி பிடித்த முறையில் தேர்வு செய்து கொள்ளலாம்..
20. இந்த செய்தியை படிக்கும் ஓய்வூதியதாரர்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ பான் எண்ணை இணைக்காவிடில் உடனடியாக இணைக்க செய்யுங்கள்...
நன்றி..
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.