' இலவச சைக்கிள் பத்திரம் ’ தலைமை ஆசிரியருக்கு உத்தரவு 'Free Cycle Bond' Order to Principal
பொதுத்தேர்வுகள் . முடிந்துள்ள நிலையில் பள்ளியில், தங்கள் இருப் பில் உள்ள இலவச சைக் கிள்களை, அவ்வப்போது கண்காணித்து, பத்திரமாக வைக்க வேண்டும், என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலைக் கல்வி பயி - லும் மாணவ, மாணவிய ருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.
கொள் முதலில் தாமதம், உதிரிபா சி கங்களை சரிவர பொருத்தி வழங்குவதில் இழுபறி உள்ளிட்ட காரணங்களால், கல்வியாண்டு முடிவு தரு வாயை எட்டும் வரையி லும், இலவச சைக்கிள் முழுமையாக மாணவ, கு மாணவியருக்கு வழங்கப் படுவதில்லை.
தற்போது, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் சைக் கிள்களுக்கென, மேல்நி -லைப்பள்ளிகளில் தனி அறையே உருவாக்கப் பட்டு, இருப்பு வைக்கப் பட்டுள்ளது. மலை போல் குவித்து வைக்கப்பட் டுள்ள சைக்கிள்களுக்கு, உபகரணம் பொருத்தும் பணி இரவு பகலாக நடந்து வந்தாலும், லோக்சபா தேர் தல் அறிவிப்பால், நடத்தை விதி அமலில் உள்ளதால், சைக்கிள்களை வழங்க முடியாத நிலை உள்ளது.
'பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந் துள்ளதால், '2024 - 25ம் ஆண்டு கல்வியாண்டு துவங்கி, ஜூன் மாதத்தில் கல்வித்துறை அறிவிப்பு வரும் வரை சைக்கிள்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். சைக்கிள் எண் ணிக்கை, உதிரிபாகம், பணி புரியும்ஊழியர்செயல்பாடு களை அவ்வப்போது, மாவட்ட கல்வி அதிகாரி கள்குழுவினர் கண்காணிக்க வேண்டும்.
சைக்கிள் பாது காப்பு விஷயத்தில் தேவை யிருப்பின், போலீஸ் உத வியையும் நாடலாம், என தலைமை ஆசிரியர் களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.