மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
தனியார் பள்ளி மாணவரை ஆசிரியர் அடித்துத் துன் புறுத்திய விவகாரத்தில், காவல் ஆய்வாளர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மது ரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருச்சி காஜாமாலைபகுதி யைச் சேர்ந்த பால் வியாபாரி இக்பால் தாக்கல் செய்த மனு: எனது மகன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் 9 -ஆம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஆண்டு செப் டம்பர் மாதம் பள்ளிக்குச் சென்று திரும்பிய அவரது உடலில் பலத்த காயங்கள் காணப்பட்டன. இதுகுறித்து விசாரித்த போது, தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், எனது மகனை சமூக அறி வியல் ஆசிரியர் முருகதாஸ் அடித்துத் துன்புறுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, எனது மகனை அருகே உள்ள
மருத்துவமனைக்கு அழைத் துச் சென்று சிகிச்சை அளித் தேன். இருப்பினும், இரவு நேரங் களில் ஆசிரியர் அடித்ததைக் கூறி புலம்ப ஆரம்பித்தார். இதையடுத்து, தனியார் மருத் துவமனையில் எனது மகனை அனுமதித்தோம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், எனது மகனின் மூளைத்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். அவரது சிகிச் சைக்காக ரூ.3 லட்சத்துக்கு மேல் செலவு செய்துவிட்ட தால், மேற்கொண்டு செலவு செய்ய முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி, காவல் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவ டிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி நிர் வாகம், ஆசிரியர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுப்பது டன், உரிய இழப்பீடு வழங்க கோரியிருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்புராயன் முன் வியாழக்கிழமை விசார ணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப் பில், ஆசிரியர் கடுமையாகத் தாக்கியதன் காரணமாக இக் பால் மகனின் மூளை பாதிக் கப்பட்டுள்ளதற்கான மருத் துவ அறிக்கை தாக்கல் செய் யப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தவு:
இந்த வழக்கில் திருச்சி கே.கே. நகர் காவல் நிலைய ஆய்வாளர் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் முருகதா ஸிடம் விசாரணை மேற் கொண்டு, இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றார் நீதிபதி.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.