Breaking

Tuesday, February 13, 2024

தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்த மாணவர் - அமைச்சர் வாழ்த்து.



ஜே.இ.இ முதன்மை தேர்வில் தமிழகத்தை சேர்ந்த முகுந்த் பிரதீஷ் என்கிற மாணவர், அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பாளையங்கோட்டை தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ், 300க்கு 300 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்த மாணவர் - அமைச்சர் வாழ்த்து.

பாளையங்கோட்டையை சேர்ந்த பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ் ஜே.இ.இ முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். 11 லட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வில், அகில இந்திய தரவரிசையில் (300/300) முதல் இடம் பெற்ற 23 மாணவர்களுள் ஒருவராகச் சாதனைப் புரிந்துள்ள மாணவர் முகுந்த் பிரதீஷ் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக விளங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.



ஜே.இ.இ தேர்வில் தமிழக மாணவர் சாதனை

இன்று வெளியான ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுள், அகில இந்திய தரவரிசையில் அதாவது 300-க்கு 300 மதிப்பெண் பெற்றவர்கள் 23 பேர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவர் முகுந்த் பிரதீஷ்-ம் ஒருவர்.

மாணவன் முகுந்த் பிரதீஷ் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog