தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மேலும் பிரபலப்படுத்த அரசு முடிவு
மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) மேலும் பிரபலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (பிஎஃப்ஆர்டிஏ) கீழ் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்ட மான தேசிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொது, தனியார், அமைப்புசாராத் துறை தொழிலாளர்களும் இணைந்து பயன்பெற முடியும்.
இத்திட்டத்தை மேலும் பிரபலப்படுத்தவும், அதிக மக்கள் இதில் விரும்பி இணையும் வகையில் சில கூடுதல் சலுகைகளை அறிவிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான சில அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
அதன்படி, பெரு நிறுவனங்கள் பணியாளர்களின் அடிப்படை ஊதி யம், அகவிலைப்படியில் 10 சதவீதத்தை ஓய்வூதியத் திட்டத்தில் செலுத் தும்போது வரி விலக்குச் சலுகை அளிக்கப்படும். 75 வயதை எட்டியவர் கள் தேசிய ஓய்வூதியத் திட்ட பலனைப் பெறும்போது முழுமையான இந்த ஓய்வூதியத்திட்டத்தில் உள்ள தனிநபர்கள் 80C பிரிவில்பெறும் வரித் தள்ளுபடி அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர அரசு ஊழி யர்களுக்கும் இத்திட்டத்தில் சில சலுகைகள் வழங்கப்பட வாய்ப்பு உள் ளது. இது தொடர்பக ஆய்வு செய்ய கடந்த ஆண்டு நிதித் துறைச் செய லர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அளிக்கும் முக்கியப் பரிந்துரைகளும் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெ றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.