TET குறைந்தபட்ச மதிப்பெண் ??
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களைத் தெரிவு செய்வதற்கு உரிய கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பணிநாடுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று போட்டித் தேர்வினை (Competitive Examination) தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தி பணிநியமனம் குறித்த உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தெரிவு செய்யும் முறையினை பின்பற்றலாம் என ஆணையிடப்பட்டுள்ளது.
4. இதனையடுத்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், மேலே நாள்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரிடமிருந்து மேற்கண்ட போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பெறப்பட்ட கருத்துருவினை பரிசீலனை செய்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கான போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்கு அனுமதியும். மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் மற்றும் அதனை அரசிதழில் வெளியிட உரிய ஆணை வழங்குமாறு அரசை கோரியுள்ளார்,
5. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் கருத்துருவினை நன்கு பரிசீலனை செய்த அரசு, அதனை ஏற்று, அரசுப் பள்ளிகளில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு பணிநாடுநர்களை தெரிவு செய்திட போட்டித் தேர்விற்கு பின்பற்றப்பட வேண்டிய பின்வரும் நடைமுறைகளுக்கு அனுமதியும் இவ்வாணையின் இணைப்பு 1 மற்றும் 2ல் காணும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போட்டித் தேர்விற்கான பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தும் அதனை அரசிதழில் வெளியிடவும் ஆணையிடுகிறது:- 1. இடைநிலை ஆசிரியர் பணித்தெரிவிற்கான போட்டித் தேர்வு அமைப்பு:
(3) மொத்த வினாக்கள்: 150
வினா வகை: கொள்குறி வினா வகை (Objective type)
ஒவ்வொரு வினாவிற்குமான மதிப்பெண்: 01 மதிப்பெண்
மொத்த மதிப்பெண்கள்: 150 மதிப்பெண்கள்
தேர்வு கால அளவு, 3 மணி நேரம்
(ஆ) பாடத் திட்டம்:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வகுப்பு 1 முதல் 10 வரையிலான தமிழ் ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்ட வரைவு 2017 பின்புற்றலாம்.
(இ) தேர்வு அமைப்பு:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்ட வரைவு 2017-ன்படி, 1 முதல் 10 வகுப்பு வரையிலான தமிழ். ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களிலிருந்து ஒவ்வொரு பாடத்திலும் தலா 30 வினாக்கள் வீதம் மொத்தம் 150 கொள்குறி வகை வினாக்கள் கொண்ட ஒரே தேர்வு வினாத்தாள் அமைப்பினை பின்பற்றலாம்.
(ஈ) குறைந்தபட்ச மதிப்பெண்:
பொது பிரிவிற்கு-40 விழுக்காடு மதிப்பெண்கள்
BC, BCM, MBC/DNC, SC, SCA, ST ी जलीलकं 30 விழுக்காடு மதிப்பெண்கள் என குறைந்தபட்ச மதிப்பெண்கள் நிர்ணயிக்கலாம். 2. பட்டதாரி ஆசிரியர் பணித்தெரிவிற்கான போட்டித் தேர்வு அமைப்பு:
(2) மொத்த வினாக்கள்: 150
வினா வகை; கொள்குறி வினா வகை (Objective type)
ஒவ்வொரு வினாவிற்குமான மதிப்பெண்: 01 மதிப்பெண்
மொத்த மதிப்பெண்கள்: 150 மதிப்பெண்கள்
தேர்வு கால அளவு: 3 மணி நேரம்
(ஆ) பாடத் திட்டம்:
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படும் நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இணைப்பில் வைக்கப்பட்டுள்ள தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கான பாடத் திட்டத்தை பின்பற்றலாம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.