2000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா - பள்ளிக்கல்வி துறை திட்டம் 2000 Surveillance Cameras in Government Schools - Department of School Education Scheme
தமிழகம் முழுதும், 2000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், மாநிலம் முழுதும் 35,000க்கும் அதிகமான, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 4282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் ஏற்கனவே, ஹைடெக் ஆய்வகம், உயர்தர அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்த, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, முதற்கட்டமாக, 2000 பள்ளிகளில் கேமராக்களும், பிராட்பேண்ட் இணைப்புகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 1646 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகள், கேமராக்கள் பொருத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில், ஜூன் மாதத்துக்குள் கேமராக்கள் பொருத்தி, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வளாகங்களில் ஏற்படும் நிகழ்வுகள், பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்வோர், ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை கண்காணிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு கேமரா பொருத்தும் ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.