ஆசிரியர் தேர்வு வாரியம் - பத்திரிக்கை செய்தி - 22.11.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 23, 2023

Comments:0

ஆசிரியர் தேர்வு வாரியம் - பத்திரிக்கை செய்தி - 22.11.2023



ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06

பத்திரிக்கை செய்தி

2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் 33 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கை எண்.1/2023, நாள்.05.06.2023 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் 12.07.2023 வரை தேர்விற்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது. Online மூலம் விண்ணப்பித்தவர்கள் 42716 பேர். அதனைத் தொடர்ந்து போட்டித் தேர்வு 10.09.2023 அன்று ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR (Optical Mark Reader) வழியில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. ஒளியீடு மதிப்பெண் கணிப்பான்- OMR (Optical Mark Reader) வழியில் தேர்வு எழுதியோர் 35,403 பேர். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில், வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் )Edit Option) फलंकाबांना सीलफंटा 13.07.2023 फक्र 17.07.2023 2 Hش ذوؤ ஆரிசரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டன.

வட்டாரக் கல்வி அலுவலருக்கான ஒளியீடு மதிப்பெண் கணிப்பான் OMR (Optical Mark Reader) வழியில் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 09.11.2023 அன்று வெளியிடப்பட்டன.

பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சன்றிதழ்கள்/ ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களுக்கு 1: 125 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சன்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு அழைப்புப் கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தங்களது அழைப்புப் கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் சுயவிவரப்படிவம் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அழைப்புக் கடிதம் பிற வழிகளில் அனுப்பி வைக்கப்படமாட்டாது என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட சான்றிதழ் சரிபார்ப்பு சார்ந்த கோரிக்கைகனை ஆசிரியர் தேர்வு வாரிய ஏற்றுக்கொள்ளப்படாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வட்டாரக் கல்வி அலுவலருக்கான பணித்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து அனைத்து விவரங்களும் வெளிப்படையாக இணையதளத்தின் வழியாகவும், செய்திக் குறிப்பின் வாயிலாகவும் தெரிவிக்கப்படும் என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

22.11.2023

CLICK HERE TO READ MORE DETAILS PDF

தலைவர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews