10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்..? அரசுக்கு வலுக்கும் கோரிக்கை
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
அதன்படி, 10ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23 முதல் 29 ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறவுள்ளது. 11ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19 முதல் 24ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 12 முதல் 17 ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 10ஆம் வகுப்பிற்கு அடுத்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 11ஆம் மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு கணித தேர்வு தேதி மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுக்கு முன்பு புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை வர உள்ளதால் தேர்வு தேதியை மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.