ஆசிரியர்களுக்கு பழைய முறைப்படி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் - முதல்வருக்கு கோரிக்கை மனு
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில நிர்வாகிகள் பாஸ்க ரன், சோமசுந்தரம், மலர்க் கண்ணன், சிவக்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.07.2023 முதல் அகவி லைப்படியை 42 சதவீதத் தில் இருந்து 46 சதவீதமாக உயர்த்தி வழங்கியமைக்கு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சார்பாக நெஞ் சார்ந்த நன்றியை தெரி வித்துக் கொள்கிறோம். அதேசமயம், பேரறிஞர் அண்ணா கொண்டுவந்த ஆசிரியர்களின் உயர்கல் விக்கான ஊக்க ஊதியம் என்ற திட்டம் தற்போது நடைமுறையில் ஆசிரி யர்களுக்கு பலன் அளிக் காத வகையில் உள்ளது இதனை மாற்றி, பழைய நடைமுறையிலேயே அனைவருக்கும் ஊக்க ஊதியம் வழங்கிட நடவ டிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், கடந்த 10.03.2020-க்கு முன்பாக உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியத்திற்காக கருத்துரு அளித்து, சுமார் மூன்றரை ஆண்டுகளாக பலர் காத்தி ருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அர சாணை 95, அனைத்து நிலைகளில் உள்ள ஆசிரி யர்களுக்கு மிகுந்த ஏமாற் றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
எனவே, இந்த அரசா ணையை ரத்து செய்வது டன், அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பழைய நடைமுறைப்படியே ஊக்க ஊதியம் வழங்கிட வேண் டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.