கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 07, 2023

Comments:0

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கு ஓவிய போட்டி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கலை ஞர் நூற்றாண்டு விழா வையொட்டி, சென்னை அரசு அருங்காட்சியகத்தில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு ஓவியப்போட்டி நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: கலைஞர் நூற்றாண்டு விழாவினை நினைவுகூ ரும் பொருட்டு, சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு சென்னை அரசு அருங்காட்சியகத்தில் ஓவி யப்போட்டி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஓவி யத்தில் திறன் பெற்றுள்ள ஒரு மாணவனை அனுப்பி வைக்க வேண்டும்.

இதில் பங்கு கொள் ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் சிறந்த ஓவியத்திற்கு பரிசு கள் வழங்கப்படும். சிறந்த ஓவியங்கள் அருங்காட்சிய கத்தில் மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப் பட உள்ளது.

இதற்கு வரும் 8ம் தேதி மாலை 5மணிக்குள் முன்ப திவு செய்து கொள்ளவேண் டும். ஓவியப் போட்டி வரும் 9ம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை அருங்காட்சியக வளாகத் தில் நடத்தப்பட உள்ளது.

ஓவியப்போட்டி தலைப் புகள் 4, 5, 6 இயற்கை காட் சிகளுடன் தமிழகநினைவுச் சின்னம் அருங்காட்சியக அரும் பொருட்கள் ஏதா வது ஒன்றின் ஓவியம். 7. 8. 9 நான் விரும்பும் தமிழக பெண் சுதந்திரப் போராட்ட வீரர் (அ) திருக்குறளுடன் அதற்கு உண்டான பொருளுடன் ஓவியம் (குரள் ஓவியம்), 10, 11, 12 தமிழ்நாட்டு பண் பாட்டுடன் அருங்காட்சி யக தொடர்பு குரல் ஓவி யம் (அ) திருக்குறளுடன் அதற்கு உண்டான பொரு ளுடன் ஓவியம் (குரள் ஓவி யம்). ஓவியம் வரைவதற்கான ஓவியத்தாள் அருங்காட் சியகத்தில் வழங்கப்படும். ஓவியம் வரைவதற்கான பென்சில்கள். வண்ணங்கள் மற்றும் இதர பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும், மாணவர் கள் தண்ணீர் பாட்டில்கள் வைத்துக் கொள்ள அனு மதி அளிக்கப்படுகிறது.

மாணவர்கள் தங்கள் வயதிற்கான அடையாள அட்டை உடன் வைத்தி ருக்க வேண்டும். ஓவியம் வரையும் போது செல் போன் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. முதலில் பதிவு செய்யும் நூறுமாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். (தொடர்புக்கு-04428193238, 9443526604, 9489228435). (Email- govtmuse@tn.gov.in)

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews