Breaking

Tuesday, September 19, 2023

நிபா பரவல் எதிரொலி - பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

கோழிக்கோட்டில் நிபா பரவல் எதிரொலி பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்


நிபா வைரஸ் காய்ச்சல் பரவலைத் தொடர்ந்து கோழிக்கோட்டில்பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவ னங்களிலும் நேற்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி 2 பேர் மரணமடைந்தனர். இந்த நோய் பாதித்த4பேர் தற்போதும் மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மாவட்டத்தில் மட்டும் நோய் அறிகுறிகளு டன் 50க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைக ளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தவிர நோயாளி களுடன் தொடர்பில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்கா ணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் நிபா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் கோழிக்கோடு மாவட்டத் தில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடு முறை அளிக்கப்பட்டது.

வரும் 23ம் தேதி வரை கல்வி நிறுவனங் கள் அனைத்தையும் மூட கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் கீதா உத்தர விட்டு உள்ளார். தொடர் விடுமுறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைனில் வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட் டது. தொடர்ந்து நேற்று முதல் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog