கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 25, 2023

Comments:0

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

கல்வி நிலையங்களில் அனைவரும் சமம் என்பதை நிரூபிக்கவே பள்ளிச் சீருடைகள் அனைவரும் என்பதில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் மட்டுமல்ல பாலினமும்தான்

2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய 'மூன்றாம் பாலினத்தவர்' என்கிற தீர்ப்பின் வரிகளிலும், 2020இல் கொண்டு வரப்பட்ட 'திருநர் பாதுகாப்புச் சட்டத்திலும் திருநர் கல்வியைப் பாதுகாக்கக் கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர், திருநங்கை உணர்வு கொண்ட அந்த மாணவனைத் தனது தேவைக்குப் பெண்ணாகப் பாவித்துத் தலைவாரச் சொல்வதும் மற்ற சிறார் அக்குழந்தையைப் புறந்தள்ளியபோது அவரும் பொதுப் புத்தியோடு அக்குழந்தையை ஒதுக்குவதும் பெரும் கொடுமை. அந்தக் கணம் அந்தக் குழந்தை மனம் படிப்பைத் தொடர முடியா நிலைக்குச் செல்லும். இனம் கண்டு பாலியல் துன்புறுத்துதல் செய்வது பெண் குழந்தையை மட்டுமல்ல, மாற்றுப்பாலினருக்கும் நடக்கிறது என்பதைத்தான் மேற்கூறிய கதையில் இருந்து அறிய வேண்டும். சக மாணவர்களும் சிறார். எனவே, அவர்கள் கண்ணால் காண்பதைத் திறந்த மனத்தோடு விமர்சிப்பார்கள். அதனால், அக்குழந்தையின் நடை, பேச்சு போன்றவற்றைக் கேலி செய்கிறார்கள். ஆனால், பள்ளி நிர்வாகம் மூன்றாம் பாலினத்தவர் குறித்து அவ்வப்போது மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிக் கல்வியில் திருநர் இடைநிற்றலைத் தடுக்க தமிழக அரசு சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாகத் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முதல் கட்டமாக ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பாலியல் சிறுபான்மையினரான திருநர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற மாற்றங்களும் முன்னெடுப்புகளும் அதிகரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews