Breaking

Friday, August 04, 2023

சத்துணவு அமைப்பாளா்களுக்கு புதிய பணி வாய்ப்பு - அரசு உத்தரவு

*சத்துணவு அமைப்பாளா்களுக்கு புதிய பணி வாய்ப்பு:* அரசு உத்தரவு

பத்தாண்டுகளுக்கு மேல் சத்துணவு அமைப்பாளா்களாக பணிபுரிந்து வருவோருக்கு, புதிய பணி வாய்ப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமூக நலத் துறை ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதம்:

புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டத்தின் கீழ், பத்தாண்டுகளுக்கு மேல் அமைப்பாளா்களாக பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு புதிய பணி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதன்படி, சமூகநலத் துறையின் கீழ், பதிவுறு எழுத்தா் பதவியில் அவா்கள் நியமனம் செய்யப்படுவா்.

இதற்காக, தகுதியான நபா்களிடமிருந்து விருப்பக் கடிதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருப்பக் கடிதத்துடன், உரிய படிவத்தையும் பூா்த்தி செய்து சமூக நலத் துறை ஆணையரகத்துக்கு வரும் 10-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog