திருமணம், கல்வி உதவித்தொகை - முதலமைச்சர் அறிவிப்பு!
வெளிநாட்டில் உயிரிழந்தவரின் மகன்/மகளுக்கு திருமண உதவித்தொகையாக 20,000, கல்வி உதவித்தொகையாக 12,000 வழங்கப்படும்
கல்வி, திருமண உதவித்தொகை பெற அயலக தமிழர் நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும்; ஒரே குடும்பத்தில் 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் - முதலமைச்சர்
நாள்: 22.08.2023
செய்தி வெளியீடு எண்: 1710
வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன் / மகளுக்கு திருமண உதவித் தொகையாக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் கல்வி உதவித் தொகையாக 12 ஆயிரம் ரூபாயும் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு.
தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு.
அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல. அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன்/மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.